தமிழ்நாடு

அஸ்தினாபுரம் பாதிப்புக்கு ஏரி மாயமானதே காரணம்; சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

Added : நவ 12, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
பல்லாவரம் : குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு, ஒரு ஏரி முழுதும் மாயமானதே காரணம் என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டிஉள்ளனர்.தொடர் மழையில், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம் பகுதி, அஸ்தினாபுரத்தில் வெள்ளம் தேங்கி, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக நேதாஜி, மாருதி, ஜெயின், ஏ.கே., மணிகண்டன்,
 அஸ்தினாபுரம் பாதிப்புக்கு  ஏரி மாயமானதே காரணம்;    சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு


பல்லாவரம் : குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு, ஒரு ஏரி முழுதும் மாயமானதே காரணம் என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டிஉள்ளனர்.

தொடர் மழையில், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம் பகுதி, அஸ்தினாபுரத்தில் வெள்ளம் தேங்கி, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக நேதாஜி, மாருதி, ஜெயின், ஏ.கே., மணிகண்டன், ராம்பிரிஜ் நகர்கள் அதிகம் பாதிக்கப்பட்டன. வீடுகளில் முழங்கால் அளவிற்கு வெள்ளம் தேங்கியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

பலர் வெளியே வர முடியாமல் வீடுகளிலேயே முடங்கினர். அத்தியாவசிய தேவைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஒவ்வொரு மழைக்கும் ஏற்படும் இப்பிரச்னைக்கு, அஸ்தினாபுரத்தில் இருந்த ஏரி ஒன்று முழுமையாக மாயமானதே காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:அஸ்தினாபுரத்தில், 40 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட ஏரி ஒன்று இருந்தது.இந்த ஏரி முழுதும் மாயமாகி, குடியிருப்புகளாக மாறி விட்டது. ஒவ்வொரு மழைக்கும், நெமிலிச்சேரி ஏரி நிரம்பி, அதன் உபரி நீர், அஸ்தினாபுரம் ஏரிக்கு செல்லும்.

பின், அஸ்தினாபுரம் ஏரி நிரம்பி, நன்மங்கலம் ஏரிக்கு நீர் செல்லும். காலம் காலமாக இந்த நடைமுறை இருந்து வந்தது.தற்போது, அஸ்தினாபுரம் ஏரி மாயமாகி விட்டதால், நெமிலிச்சேரி ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், மேற்கண்ட பகுதிகளில் சூழ்ந்துவிட்டது. குடியிருப்புகளில், முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கியதால், மக்கள் அவதிப்பட்டனர். ஒவ்வொரு மழைக்கும் இப்பிரச்னை தொடர்கிறது. அதனால் ஏரி மற்றும் கால்வாய்களை மீட்க, அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murugan - Bandar Seri Begawan,புருனே
14-நவ-202105:06:16 IST Report Abuse
Murugan சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:அஸ்தினாபுரத்தில், 40 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட ஏரி ஒன்று இருந்தது.இந்த ஏரி முழுதும் மாயமாகி, குடியிருப்புகளாக மாறி விட்டது
Rate this:
Cancel
13-நவ-202114:12:36 IST Report Abuse
அப்புசாமி இந்த சமூக ஆர்வலர்களின் வீட்டு முகவரியை காமிக்கச் சொல்லுங்க. ஏதோ ஒரு ஆக்கிரமிப்பில் கட்டுன வூடாத்தான் இருக்கும். என்னமோ செவ்வாய் கிரகத்தில் வசிக்குற மாதிரி நினைப்பு.
Rate this:
Cancel
Vyjayanthy. S - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-நவ-202113:05:12 IST Report Abuse
Vyjayanthy. S 40 வருடமாய் நாங்கள் எங்கு தன உள்ளோம். a d m k ஆட்சியில் ஏறி ஆக்ரமிப்பு அகற்ற அப்போதைய அமைச்சர் வளர்மதி மற்றும் அரசு அதிகாரிகள் வந்த போது தி. மு. க மிக பெரிய வன்முறை செய்து அவர்களை விரட்டி, அடித்து உதைத்தனர். அரசு அதிகாரிகள் பலருக்கு காயம். அதற்கு பிறகு யாரும் வரவே இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X