மறைமுக தேர்தலிலும் 'வீடியோ' பதிவு மாநில தேர்தல் கமிஷனுக்கு அறிவுரை

Updated : நவ 14, 2021 | Added : நவ 12, 2021 | கருத்துகள் (2)
Advertisement
சென்னை :மறைமுக தேர்தல் நடவடிக்கைகளை 'வீடியோ' பதிவு செய்து, 60 நாட்கள் பாதுகாப்புடன் வைத்திருக்கும்படி, மாநில தேர்தல் கமிஷனுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.பாதுகாப்புவிழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகா, நல்லுார் கிராமத்தை சேர்ந்த கண்ணன் தாக்கல் செய்த மனு: மரக்காணம் ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலராக தேர்வானேன். தலைவர் மற்றும் துணைத் தலைவர்
 மறைமுக தேர்தல் 'வீடியோ' பதிவு மாநில தேர்தல் கமிஷனுக்கு அறிவுரை

சென்னை :மறைமுக தேர்தல் நடவடிக்கைகளை 'வீடியோ' பதிவு செய்து, 60 நாட்கள் பாதுகாப்புடன் வைத்திருக்கும்படி, மாநில தேர்தல் கமிஷனுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
பாதுகாப்புவிழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகா, நல்லுார் கிராமத்தை சேர்ந்த கண்ணன் தாக்கல் செய்த மனு: மரக்காணம் ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலராக தேர்வானேன்.

தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல், அக்., 22ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. போதிய போலீஸ் பாதுகாப்பு கோரி எஸ்.பி.,க்கு மனு அளித்தேன்.தேர்தல் நடக்க இருந்த கூட்ட அரங்குக்கு வர விடாமல், எங்களை ஒரு கும்பல் தடுத்தது. தேர்தல் நடக்காததற்கு அதுவே காரணம்.எனவே, தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடத்த, போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்; கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். தேர்தல் அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கா.மாமண்டல் கிராம பஞ்சாயத்து துணைத் தலைவருக்கான தேர்தல் நடத்தவும், போலீஸ் பாதுகாப்பு, வீடியோ பதிவு கோரியும், வார்டு உறுப்பினர்கள் பத்மாவதி உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுக்கள், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தன.மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், வழக்கறிஞர் கே.செல்வராஜ், அரசு தரப்பில் அரசு பிளீடர் முத்துக்குமார் ஆஜராகினர்.
'வீடியோ' பதிவு

மாநில தேர்தல் கமிஷன் சார்பில், வழக்கறிஞர் சிவ சண்முகம் ஆஜராகி, ''மரக்காணம் ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல், வரும் 22ம் தேதியும்; கா.மாமண்டல் பஞ்சாயத்து துணைத் தலைவர் தேர்தல், 24ம் தேதியும் நடக்கும்,'' என்றார்.இதை பதிவு செய்து முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:தேர்தல் நடக்கும் இடத்துக்கு, உரிமை உள்ள அனைவரும் சுதந்திரமாக செல்வதை, மாநில தேர்தல் கமிஷனும், போலீசாரும் உறுதி செய்ய வேண்டும். தேர்தல் நடவடிக்கையை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும். தேர்தல் அரங்கின் வெளியில் நிலவும் சூழ்நிலையையும் பதிவு செய்ய வேண்டும்.

அதை, 60 நாட்கள் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.மறைமுக தேர்தல் நடத்தாத இடங்களில், எப்போது நடக்கும் என்ற கேள்விக்கு, வரும் 29ம் தேதிக்குள் அனைத்து நடவடிக்கைகளும் முடிக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் சார்பில் பதில் அளிக்கப்பட்டது.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
13-நவ-202108:58:21 IST Report Abuse
Kasimani Baskaran திமுகவையும் அராஜகத்தையும் பிரிக்க முடியாது. அதிகாரத்தில் வேறு இருக்கிறார்கள் - சொல்லவும் வேண்டுமா?
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
13-நவ-202108:53:31 IST Report Abuse
duruvasar ' கண்டையனர்' கண்காணிப்பு குழு மாதிரி கேமரா வை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X