கால்வாய் சீரமைக்கப்படாததால் 3 நாட்களாக வடியாத வெள்ளம்

Added : நவ 12, 2021
Share
Advertisement
குன்றத்துார் : குன்றத்துாரை அடுத்த தண்டலம் ஊராட்சியில், குடியிருப்புகளில் வெள்ளம் தேங்கியதற்கு, அப்பகுதி வழியாக செல்லும் ஓடை கால்வாயை மழைக்கு முன் சீரமைக்காததே காரணம் என, மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, தண்டலம் ஊராட்சியில், தொடர் மழையால், குடியிருப்புகளை சுற்றி வெள்ளம் தேங்கியது. பாம்பு, விஷ

குன்றத்துார் : குன்றத்துாரை அடுத்த தண்டலம் ஊராட்சியில், குடியிருப்புகளில் வெள்ளம் தேங்கியதற்கு, அப்பகுதி வழியாக செல்லும் ஓடை கால்வாயை மழைக்கு முன் சீரமைக்காததே காரணம் என, மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, தண்டலம் ஊராட்சியில், தொடர் மழையால், குடியிருப்புகளை சுற்றி வெள்ளம் தேங்கியது. பாம்பு, விஷ வண்டுகள் படையெடுத்ததால், மக்கள் வெளியே வர முடியாமல் அச்சப் பட்டனர். குடியிருப்புகளில் வெள்ளம் தேங்கியதற்கு, அண்ணா தெருவுக்கு பின்னால் செல்லும் கால்வாயை, முறையாக அகலப்படுத்தி, மழைக்கு முன் சீரமைக்காததே காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த கால்வாயில் பிளாஸ்டிக், குப்பை தேங்கியிருந்ததால், மழை நீர் செல்ல வழியின்றி தடைப்பட்டு, திசை மாறி அண்ணா தெரு, ஆகாஷ் வில்லா பகுதிகளில் தேங்கியது.இப்படி ஏற்பட வாய்ப்புள்ளது என்பது தெரிந்தும், ஒன்றிய அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.மூன்று நாட்களாக அண்ணா தெருவில், ஒன்றரை அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கி நிற்பதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. அதில் வீட்டு கழிவுநீர் கலப்பதால், நடந்து செல்வோருக்கு தோல் அரிப்பு, சேற்றுப்புண் ஏற்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரி இந்த பகுதியை நேரடியாக ஆய்வு செய்து, நிவாரண பணிகளை முடுக்கி விட வேண்டும். ஓடை கால்வாயை இப்போதாவது துார்வாரினால் மட்டுமே, அடுத்தடுத்த மழைக்கு இந்த பகுதி தப்பிக்கும் என, மக்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X