பொது செய்தி

தமிழ்நாடு

மலை மண்ணை கொட்டி

Added : நவ 12, 2021
Share
Advertisement
குன்றத்துார் : நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, தண்டலம் ஊராட்சியின் பிரதான சாலையில் இருந்த மரண பள்ளங்களை, மலை மண்ணை கொட்டி, தற்காலிகமாக மூடும் பணி நடந்து வருகிறது.தொடர்மழைக்கு, குன்றத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கிய தண்டலம் ஊராட்சி அதிக பாதிப்புக்குள்ளானது. வெள்ளம் தேங்கி, மக்களின் இயல்வு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. ஊராட்சியின் பிரதான சாலையான, அம்பாள்

குன்றத்துார் : நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, தண்டலம் ஊராட்சியின் பிரதான சாலையில் இருந்த மரண பள்ளங்களை, மலை மண்ணை கொட்டி, தற்காலிகமாக மூடும் பணி நடந்து வருகிறது.

தொடர்மழைக்கு, குன்றத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கிய தண்டலம் ஊராட்சி அதிக பாதிப்புக்குள்ளானது. வெள்ளம் தேங்கி, மக்களின் இயல்வு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. ஊராட்சியின் பிரதான சாலையான, அம்பாள் நகர் பிரதான சாலை பயன்படுத்த முடிாத அளவிற்கு குளம் போல் மழைநீர் தேங்கி, மரண பள்ளங்களாக மாறியது

.இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இது குறித்து, நம் நாளிதழில், படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, மலை மண்ணை கொட்டி, மரண பள்ளங்களை தற்காலிகமாக மூடும் பணி நடந்து வருகிறது.இந்த தற்காலிக நடவடிக்கையோடு அப்படியே விட்டு விடாமல், மழை நின்ற பிறகு, நிரந்தரமாக சாலையை சீரமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X