தமிழ்நாடு

நுால் விலை 62 சதவீதம் உயர்வு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

Added : நவ 12, 2021
Share
Advertisement
திருப்பூர்: 'நுால் விலை, 62 சதவீதம் உயர்ந்துள்ளதால், ஜவுளித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது; விலை உயர்வை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று, தமிழக தலைமை செயலர் இறையன்பு, மத்திய ஜவுளித்துறை செயலருக்கு அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.கடந்த சில மாதங்களாக, நுால் விலை அபரிமிதமாக உயர்ந்து வருகிறது. பின்னலாடை தயாரிக்க பயன்படுத்தும் ஒசைரி நுால்,

திருப்பூர்: 'நுால் விலை, 62 சதவீதம் உயர்ந்துள்ளதால், ஜவுளித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது; விலை உயர்வை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று, தமிழக தலைமை செயலர் இறையன்பு, மத்திய ஜவுளித்துறை செயலருக்கு அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.கடந்த சில மாதங்களாக, நுால் விலை அபரிமிதமாக உயர்ந்து வருகிறது. பின்னலாடை தயாரிக்க பயன்படுத்தும் ஒசைரி நுால், கிலோவுக்கு 50 ரூபாய் உயர்ந்துள்ளது.ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (ஏ.இ.பி.சி.,), திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) உள்பட, பின்னலாடை தொழில் துறை அமைப்பினர், நுால் விலை உயர்வை கட்டுப்படுத்த, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை விடுத்தன.இந்நிலையில், தலைமை செயலர் இறையன்பு, மத்திய ஜவுளித்துறை செயலர் உபேந்திர பிரசாத் சிங்குக்கு அனுப்பியுள்ள கடிதம்:இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில், தமிழகத்தின் பங்களிப்பு, 19 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதும் உள்ள, நுாற்பாலைகளில், 45 சதவீதம் தமிழகத்தில் இயங்குகின்றன. குறு, சிறு, நடுத்தர ஜவளி தொழில்கள் வாயிலாக, 31 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.பருத்தி நுாலிழை விலை, ஒரே ஆண்டில், 62 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. 2020 நவ., மாதம், கிலோ, 210 ரூபாயாக இருந்த நுால் விலை, தற்போது 340 ரூபாயாக உயர்ந்துள்ளது. பருத்தி - பஞ்சு பதுக்கலால், நுால் விலை உயர்கிறது. நுாற்பாலைகளின் நேரடி பருத்தி கொள்முதல் உச்சவரம்பை, இந்திய பருத்தி கழகம் நிர்ணயிக்க வேண்டும்.மத்திய அரசு நேரடியாக தலையிட்டு, ஒட்டுமொத்த ஜவுளித்தொழிலை பாதுகாக்கும் வகையில், நுால் விலை உயர்வை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X