பொது செய்தி

தமிழ்நாடு

வடசென்னை நிலையத்தில் மின் உற்பத்தி துவக்கம்

Added : நவ 12, 2021
Share
Advertisement
சென்னை : கனமழையால் பாதிக்கப்பட்ட திருவள்ளூரில் உள்ள வடசென்னை மின் நிலையத்தில், நேற்று மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது.திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில், மின் வாரியத்திற்கு வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது. அங்கு, தலா 210 மெகா வாட் திறன் உடைய மூன்று அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இது, சென்னையின் மின் தேவையை பூர்த்தி செய்கிறது.நேற்று முன்தினம் பெய்த கன

சென்னை : கனமழையால் பாதிக்கப்பட்ட திருவள்ளூரில் உள்ள வடசென்னை மின் நிலையத்தில், நேற்று மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது.

திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில், மின் வாரியத்திற்கு வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது. அங்கு, தலா 210 மெகா வாட் திறன் உடைய மூன்று அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இது, சென்னையின் மின் தேவையை பூர்த்தி செய்கிறது.நேற்று முன்தினம் பெய்த கன மழையாலும், பலத்த காற்று வீசியதாலும், வட சென்னை மின் நிலையத்தில் இருந்த செடிகள் சாய்ந்து, மழை நீர் கால்வாயை அடைத்தது.

இதனால், மழை நீர் வெளியேற்றுவதில் தடை ஏற்பட்டது.மேலும், நிலக்கரி சேமிக்கப்பட்டு வந்த தளத்தில் மழை நீர் தேங்கியதால், நிலக்கரி கையாளுவதிலும் பாதிப்பு ஏற்பட்டது.இதனால், வட சென்னை மின் நிலையத்தின் முதல் அலகில் நேற்று முன்தினம் காலை 9:48 மணிக்கும்; இரண்டாவது அலகில் மதியம் 1:48 மணிக்கும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இந்த மின் நிலையத்தை, நேற்று முன்தினம் இரவும், நேற்றும், மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மின் வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி ஆய்வு செய்தனர். மழை நீர் அகற்றுவது, கால்வாய் அடைப்பு சரிசெய்யும் பணியை ஊழியர்கள் துரித கதியில் மேற்கொண்டனர்.இதையடுத்து, நேற்று காலை, வட சென்னை மின் நிலையத்தின் முதல் அலகில் மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது.

இரண்டாவது அலகும் மின் உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ளது. மழையால், மின் தேவை குறைந்துள்ளதால், மின் தேவை அதிகரிப்பிற்கு ஏற்ப அந்த அலகில் மின் உற்பத்தியை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X