கொலை வழக்கில் மூவருக்கு ஆயுள்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கொலை வழக்கில் மூவருக்கு ஆயுள்

Added : நவ 12, 2021
Share
திருப்பூர்: திருப்பூரில், பனியன் பிரின்டிங் நிறுவன உரிமையாளரை கொன்று, பணத்தை கொள்ளையடித்த மூவருக்கு, திருப்பூர் கோர்ட் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.திருப்பூர், ஆலாங்காடு பகுதியில் பனியன் பிரின்டிங் பட்டறை நடத்தி வந்தவர் ஜோ நோபில், 35. சென்னையைச் சேர்ந்த சதீஷ், 23, யோகேஷ், 23, ஸ்டீபன்ராஜ், 23 ஆகியோர், பிரின்டிங் நிறுவனத்திலேயே தங்கி வேலை பார்த்து வந்தனர்.கடந்த, 2018 மே

திருப்பூர்: திருப்பூரில், பனியன் பிரின்டிங் நிறுவன உரிமையாளரை கொன்று, பணத்தை கொள்ளையடித்த மூவருக்கு, திருப்பூர் கோர்ட் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.திருப்பூர், ஆலாங்காடு பகுதியில் பனியன் பிரின்டிங் பட்டறை நடத்தி வந்தவர் ஜோ நோபில், 35. சென்னையைச் சேர்ந்த சதீஷ், 23, யோகேஷ், 23, ஸ்டீபன்ராஜ், 23 ஆகியோர், பிரின்டிங் நிறுவனத்திலேயே தங்கி வேலை பார்த்து வந்தனர்.கடந்த, 2018 மே 6ம் தேதி, இரவு, பிரின்டிங் அலுவலகத்தில் துாங்கி கொண்டிருந்த ஜோ நோபிலை, தொழிலாளர்கள் மூன்று பேரும் சேர்ந்து கத்தியால் குத்தி கொன்று, 10 ஆயிரம் ரூபாயை திருடினர்; அலுவலக ஊழியர் தமிழ்ச்செல்வியை,45, மிரட்டி அறையில் அடைத்துவிட்டு தப்பினர்.திருப்பூர் சென்ட்ரல் போலீசார் வழக்கு பதிந்து, சதீஷ், யோகேஷ், ஸ்டீபன்ராஜை கைது செய்தனர். திருப்பூர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் வழக்கு விசாரிக்கப்பட்டது.கொலை குற்றத்துக்காக மூவருக்கும் ஆயுள் தண்டனையும், கொள்ளையடித்த குற்றத்துக்காக, ஏழு ஆண்டு சிறை தண்டனையும், ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று, மாவட்ட நீதிபதி சொர்ணம் நடராஜன், நேற்று தீர்ப்பளித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X