நகைக்காக அக்காவை கொன்று நாடகமாடிய தம்பி கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகைக்காக அக்காவை கொன்று நாடகமாடிய தம்பி கைது

Added : நவ 12, 2021
Share
அச்சிறுப்பாக்கம் : பணம் மற்றும் நகைக்காக, உடன் பிறந்த சகோதரியை கொலை செய்து, நாடகமாடிய பாசக்கார தம்பியை, போலீசார் கைது செய்தனர்.அச்சிறுப்பாக்கம் அடுத்த அம்மணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லம்மாள், 58. கடந்த 2ம் தேதி, அம்மணம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில், தலையின் பின்புறம், ரத்தம் சொட்டிய நிலையில் இறந்து கிடந்தார்.அவரது தம்பி சுப்ரமணியம், 45, அளித்த

அச்சிறுப்பாக்கம் : பணம் மற்றும் நகைக்காக, உடன் பிறந்த சகோதரியை கொலை செய்து, நாடகமாடிய பாசக்கார தம்பியை, போலீசார் கைது செய்தனர்.
அச்சிறுப்பாக்கம் அடுத்த அம்மணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லம்மாள், 58. கடந்த 2ம் தேதி, அம்மணம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில், தலையின் பின்புறம், ரத்தம் சொட்டிய நிலையில் இறந்து கிடந்தார்.அவரது தம்பி சுப்ரமணியம், 45, அளித்த புகாரின்பேரில், அச்சிறுப்பாக்கம் போலீசார், செல்லம்மாள் சடலத்தை மீட்டு, விசாரணை மேற்கொண்டனர்.

இதில், செல்லம்மாளை, அவரது தம்பி சுப்ரமணியம் கொலை செய்தது தெரிந்து, போலீசார் அவரை, நேற்று கைது செய்தனர்.போலீசார் கூறியதாவது:சம்பவத்தன்று, செல்லம்மாள் தனியாக வீட்டில் இருந்தபோது, அதே பகுதியில் வசிக்கும் அவரது தம்பி சுப்ரமணியம், சொத்து கேட்டு பிரச்னை செய்துள்ளார்.பணம் மற்றும் நகை கேட்டதற்கு, செல்லம்மாள் தர மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சுப்ரமணியன், செல்லம்மாளின் பின்புறம் இரும்பு ஊதாங்குழலால் அடித்து கொன்று, அவரது கழுத்து மற்றும் காதில் இருந்த முக்கால் சவரன் நகைகளை பறித்து சென்றுள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X