கொருக்குப்பேட்டையில் மக்கள் திடீர் மறியல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொருக்குப்பேட்டையில் மக்கள் திடீர் மறியல்

Added : நவ 12, 2021
Share
கொருக்குப்பேட்டை : வீட்டுக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்ற கோரி, பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.சென்னை கொருக்குப்பேட்டை அனந்தநாயகி நகர், ஹரி நாராயணபுரம், அம்பாள் நகர் பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர்.கடந்த ஐந்து நாட்களாக பெய்த கனமழையால், இப்பகுதிகள் முழுதும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை நீரில் கழிவு நீரும் கலந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது.

கொருக்குப்பேட்டை : வீட்டுக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்ற கோரி, பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை கொருக்குப்பேட்டை அனந்தநாயகி நகர், ஹரி நாராயணபுரம், அம்பாள் நகர் பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர்.கடந்த ஐந்து நாட்களாக பெய்த கனமழையால், இப்பகுதிகள் முழுதும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை நீரில் கழிவு நீரும் கலந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தண்டையார்பேட்டை மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகாரளித்தும், நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது.இதனால், வீட்டுக்குள் புகுந்துள்ள மழை நீரை அகற்ற கோரி, அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர், கொருக்குப்பேட்டை சி.பி., சாலையில் நேற்று, திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து மாநகராட்சி அதிகாரிகள், ஆர்.கே., நகர் எம்.எல்.ஏ., எபினேசர் ஆகியோர் வந்து சமாதானம் செய்து, மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து மக்கள் கலைந்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X