சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : நவ 12, 2021
Share
Advertisement
வெள்ள நீரில் சிக்கி சிறுவன் பலிகூவம்: கடம்பத்துார் ஒன்றியம், கூவம் ஊராட்சி புதிய காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் மகன் ஜீவன், 9. நேற்று காலை, தன் வீட்டின் அருகே நீர்வரத்து கால்வாயில் குளிக்க சென்றார்.அப்போது திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கினார். பொதுமக்கள், சிறுவனை மீட்டு பேரம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, பரிசோதித்த மருத்துவர் சிறுவன்
 சில வரி செய்திகள்

வெள்ள நீரில் சிக்கி சிறுவன் பலி

கூவம்: கடம்பத்துார் ஒன்றியம், கூவம் ஊராட்சி புதிய காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் மகன் ஜீவன், 9. நேற்று காலை, தன் வீட்டின் அருகே நீர்வரத்து கால்வாயில் குளிக்க சென்றார்.

அப்போது திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கினார். பொதுமக்கள், சிறுவனை மீட்டு பேரம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, பரிசோதித்த மருத்துவர் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.மழை நீர் அகற்ற மறியல்வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த, தென்னேரி கிராமம் குளக்கரை ஒட்டி, சில குடியிருப்புகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

தண்ணீரை அகற்றுவதற்கு, ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என, பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.தொடர்ந்து நேற்று மதியம் 12:20 மணிக்கு தென்னேரி கிராமத்தைச்சேர்ந்த சிலர், வாலாஜாபாத் - சுங்குவார்த்திரம் சாலையில், மறியலில் ஈடுபட்டனர்.

வாலாஜபாத் போலீசார் அவர்களை சமரசப்படுத்தியதும் கலைந்து சென்றனர்.மின்கம்பியில் சிக்கி எட்டு மாடுகள் பலிமேல்நல்லாத்துார்: மேல்நல்லாத்துார் அடுத்த பட்டரை பகுதியில், வெங்கத்துாரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான நான்கு எருமை மாடுகள், பட்டரை பகுதியைச் சேர்ந்த மைதிலி என்பவரின் மூன்று பசு மாடுகள்,

மகேஸ்வரி என்பவரது ஒரு பசுமாடு என, எட்டு மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது.அப்போது அறுந்து கிடந்த மின்கம்பியில் எட்டு மாடுகளும் சிக்கி பலியாகின. தகவலறிந்த வி.ஏ.ஓ., விஸ்வநாத் தகவலின்பேரில், திருவள்ளூர் தாலுகா போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X