நீட், ஜே.இ.இ., தேர்வுக்கு சிறப்பு வகுப்பு துவங்கியாச்சு! முன்னுதாரணமாக திகழும் கோவை

Added : நவ 12, 2021
Advertisement
கோவை: மாநில அளவிலான நீட், ஜே.இ.இ., பயிற்சி வகுப்புகள் துவங்கும் முன்பு, கோவை மாவட்டத்தில், 100 அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, சிறப்பு வகுப்புகள், தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.அரசுப்பள்ளி மாணவர்கள், மருத்துவம் மட்டுமல்லாமல், பொறியியல், வேளாண்மை, மீன்வளம் உள்ளிட்ட தொழில் சார்ந்த படிப்புகளிலும், 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், சேர வழிவகை செய்யப்பட்டுள்ளது.



கோவை: மாநில அளவிலான நீட், ஜே.இ.இ., பயிற்சி வகுப்புகள் துவங்கும் முன்பு, கோவை மாவட்டத்தில், 100 அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, சிறப்பு வகுப்புகள், தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.அரசுப்பள்ளி மாணவர்கள், மருத்துவம் மட்டுமல்லாமல், பொறியியல், வேளாண்மை, மீன்வளம் உள்ளிட்ட தொழில் சார்ந்த படிப்புகளிலும், 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், சேர வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை, கோவை மாவட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள, புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, ஆர்வமுள்ள 100 அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வார இறுதி நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்துவது, தேர்வுகள் நடத்துவது என திட்டமிடப்பட்டது. இதற்காக, சிறப்புத்தேர்வு நடத்தி, தேர்வு செய்யப்பட்ட 100 பேருக்கு தற்போது ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடக்கின்றன.சனிக்கிழமை வரை பள்ளிகள் இயங்குவதால், ஞாயிற்றுக்கிழமை ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு முக்கிய பாடங்களுக்கு, ஆசிரியர்கள் வகுப்புகள் நடத்தி வருகின்றனர்.பருவமழை முடிந்த பிறகு, நேரடி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, நீட் சிலபஸ் படி, வகுப்புகளை கையாள்வதோடு, வாரந்தோறும் தேர்வுகள் நடத்தி, மாணவர்கள் கற்றல் நிலை பரிசோதிக்கப்படுவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். மாநில அளவிலான வகுப்புகள் துவங்குவதற்கு முன்பே, கோவை மாவட்டத்தில் இச்சிறப்பு வகுப்பு துவங்கப்பட்டுள்ளதற்கு, பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.'நுாறு மாணவர்களை தேர்வு செய்து தேர்வு'முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறுகையில், '' நீட், ஜே.இ.இ., போன்ற போட்டித்தேர்வுகளுக்கு, ஆர்வமுள்ள மாணவர்களை தேர்வு செய்யும் பட்சத்தில், இறுதிவரை சிறப்பு வகுப்புகளில் பங்கேற்று, கவனச்சிதறல் இன்றி படிப்பர். அதனால், 100 மாணவர்களை மட்டும் தேர்வு செய்து, வகுப்புகள், மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இவர்களுக்கு நீட், ஜே.இ.இ., தேர்வுக்கு சிலபஸ் அடிப்படையில், பாடக்கருத்துகள் படிக்க கையேடு விரைவில் வழங்க திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X