தமிழ்நாடு

அடையாற்றில் 10 ஆயிரம் கனஅடிக்கு மேல் வெள்ளம்

Added : நவ 12, 2021
Share
Advertisement
தாம்பரம் : கனமழையால் புறநகரில் பல ஏரிகள் நிரம்பி, உபரி நீர் வெளியேறியதால், அடையாற்றில் 10 ஆயிரம் கனஅடிக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால், முடிச்சூர் ஊராட்சி, தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட, செம்பாக்கம், பீர்க்கன்காரணை பகுதிகள் மூழ்கின. நேற்று மாலை முதல், மீட்பு பணிகளும், மழை நீரை வெளியேற்றும் பணிகளும், தீவிரப்படுத்தப்பட்டன,அதேநேரம்,மழை நின்ற பின், தாம்பரம்
அடையாற்றில் 10 ஆயிரம் கனஅடிக்கு மேல் வெள்ளம்

தாம்பரம் : கனமழையால் புறநகரில் பல ஏரிகள் நிரம்பி, உபரி நீர் வெளியேறியதால், அடையாற்றில் 10 ஆயிரம் கனஅடிக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்தது.

இதனால், முடிச்சூர் ஊராட்சி, தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட, செம்பாக்கம், பீர்க்கன்காரணை பகுதிகள் மூழ்கின. நேற்று மாலை முதல், மீட்பு பணிகளும், மழை நீரை வெளியேற்றும் பணிகளும், தீவிரப்படுத்தப்பட்டன,அதேநேரம்,மழை நின்ற பின், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட, பழைய பெருங்களத்துார் பகுதியில் உள்ள, குட்வில் நகர், சசிவரதன் நகர், காசா கிராண்ட், ராகவேந்திரா கார்டன், மூவேந்தர், பாரதி நகர்கள் உட்பட, ஐந்திற்கும் மேற்பட்ட பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு முதல் திடீரென வெள்ளம் சூழ துவங்கியது.

நேற்று காலை, மேற்கண்ட பகுதிகள் அனைத்திலும், இடுப்பளவு தண்ணீர் தேங்கியது. இதனால், தாம்பரம் - முடிச்சூர் சாலையில், பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த, பீர்க்கன்காரணை போலீசார் மற்றும் தாம்பரம், எம்.எல்.ஏ., ராஜா ஆகியோர், அவர்களிடம் பேசி கலைத்தனர்.இது குறித்து, பகுதி மக்கள் கூறியதாவது:மழை பெய்யும் நேரங்களைவிட நின்றபின்பே, எங்கள் பகுதியை வெள்ளம் அதிகமாக சூழ்கிறது.

இது, ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது.இதை தடுக்க, குட்வில் நகர் பின்புறம் உள்ள, அடையாறு கால்வாயில் இருந்து, பாப்பான் கால்வாய்க்கு முறையான, வடிகால் திட்டம் அமைக்க வேண்டும் என, 2015 வெள்ள பாதிப்பிலிருந்து கூறி வருகிறோம். அதை, அரசு கண்டுகொள்ளவில்லை. அதிகாரிகள் ஊருக்குள் வராததால், எங்களின் பிரச்னைகளும் அவர்களுக்கு தெரியாமலேயே போய்விடுகின்றன. இந்தாண்டாவது, இதற்கு தீர்வு கிடைக்குமா என எதிர்பார்த்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X