செய்தி செய்தி

தமிழ்நாடு

'வெட் மிக்ஸ்' கொட்டி சாலை சீரமைப்பு

Added : நவ 13, 2021
Share
Advertisement
கோவை: நமது நாளிதழில் வெளியிட்ட செய்தியை தொடர்ந்து, கோவை நகர் பகுதியில் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் ஏற்பட்டுள்ள குழிகளில், 'வெட் மிக்ஸ்' கொட்டி, சீரமைக்கும் பணியில், மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.கோவை நகர் பகுதியில், 24 மணி நேர குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக, பல்வேறு இடங்களில் குழிகள் தோண்டப்பட்டன. இவை சரி வர மூடப்படவில்லை. நிதி நிலையை காரணம்

கோவை: நமது நாளிதழில் வெளியிட்ட செய்தியை தொடர்ந்து, கோவை நகர் பகுதியில் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் ஏற்பட்டுள்ள குழிகளில், 'வெட் மிக்ஸ்' கொட்டி, சீரமைக்கும் பணியில், மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.
கோவை நகர் பகுதியில், 24 மணி நேர குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக, பல்வேறு இடங்களில் குழிகள் தோண்டப்பட்டன. இவை சரி வர மூடப்படவில்லை.
நிதி நிலையை காரணம் காட்டி, புதிதாக தார் ரோடு போடுதல், புதுப்பித்தல், 'பேட்ச் ஒர்க்' மேற்கொள்தல் உள்ளிட்ட பணிகளை, மாநகராட்சி நிர்வாகம் ரத்து செய்தது. இதன் காரணமாக, ரோடெல்லாம் குழிகளாக காணப்படுகின்றன. எந்த ரோட்டில் சென்றாலும், 10க்கும் மேற்பட்ட குழிகள் தென்படுகின்றன. 'ஸ்மார்ட் சிட்டி' என பெருமையாக சொன்னாலும், குழியில்லாத ரோடுகளே இல்லை என்கிற அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.இச்சூழலில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், சிறிதாக இருந்த குழிகள் பலவும் பெரிதாகி, மரணக்குழிகளாகி விட்டன. குழி எது; ரோடு எது என தெரியாத அளவுக்கு தண்ணீர் தேங்கியிருக்கின்றன.
கார், இருசக்கர வாகனங்களில் செல்வோர், குழி தெரியாமல் தடுமாற்றம் அடைகின்றனர். சேறும் சகதியுமாக காணப்படும் ரோடுகளில் வழுக்கி விழுகின்றனர்.இதுதொடர்பாக, 9ம் தேதி நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, போக்குவரத்து மிகுந்த சாலைகளில் ஏற்பட்டுள்ள குழிகளில் 'வெட் மிக்ஸ்' கொட்டி, சாலையை சீரமைக்க, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சாலையை சீரமைக்கும் பணியில், பொறியியல் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.ரூ.10 கோடிக்கு சாலை: 'டூரிப்' திட்டத்தில் கருத்துரு'டூரிப்' திட்டத்தில், ரூ.10 கோடிக்கு, 17.87 கி.மீ., துாரத்துக்கு தார் சாலை அமைக்க, மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது. இதில், 14, 30, 31, 51, 53, 61, 64, 75, 85, 86, 92, 95, 99 ஆகிய வார்டுகளில், 28 பணிகளுக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, நிர்வாக அனுமதி கேட்டு, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனருக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X