ஒய்.ஜி.,யின் சாருகேசி நாடகம் சென்னையில் அரங்கேற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒய்.ஜி.,யின் 'சாருகேசி' நாடகம் சென்னையில் அரங்கேற்றம்

Added : நவ 13, 2021
Share
- நமது நிருபர் -ஒய்.ஜி.மகேந்திரனின், 'யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட்' நாடக குழுவின், 70ம் ஆண்டு பயணத்தை சிறப்பிக்கும் வகையில் 'சாருகேசி' நாடகம் இன்று முதல் டிச., 19ம் தேதி வரை, சென்னையில் பல்வேறு இடங்களில் அரங்கேற்றப்பட உள்ளது.நாடக நடிகரும், இயக்குனருமான ஒய்.ஜி.மகேந்திரனின் 'யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட்' நாடக குழு, 70ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அத்துடன்,

- நமது நிருபர் -ஒய்.ஜி.மகேந்திரனின், 'யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட்' நாடக குழுவின், 70ம் ஆண்டு பயணத்தை சிறப்பிக்கும் வகையில் 'சாருகேசி' நாடகம் இன்று முதல் டிச., 19ம் தேதி வரை, சென்னையில் பல்வேறு இடங்களில் அரங்கேற்றப்பட உள்ளது.நாடக நடிகரும், இயக்குனருமான ஒய்.ஜி.மகேந்திரனின் 'யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட்' நாடக குழு, 70ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அத்துடன், ஒய்.ஜி.மகேந்திரன் நாடக மேடையேறி 60 ஆண்டு நிறைவடைந்துள்ளது. இதை சிறப்பிக்கும் வகையில், மறைந்த நாடக கலைஞர் கிரேஸி மோகனின் மையக்கருவை வைத்து, வெங்கட் எழுதிய 'சாருகேசி' நாடகம் இன்றும், நாளையும், சென்னை நாரதகான சபாவில் அரங்கேற்றப்பட உள்ளது. முன்னதாக தி.நகர் வாணிமகாலில் நவ. 12ம்தேதி அரங்கேற்றப்பட இருந்தது. மழை, வெள்ளம் காரணமாக தேதி ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து, 20 மற்றும் 21ம் தேதி தி.நகர் பாரத்கலாச்சார் அரங்கத்திலும், நவ., 28 மற்றும் டிச., 4ல் மைலாப்பூர் பைன்ஆர்ட்ஸ் கிளப்பிலும், டிச., 5ல் தி.நகர் வாணி மகாலிலும், டிச., 19ல் நங்கநல்லுாரிலும் 'சாருகேசி' நாடகம் அரங்கேற்றப்பட உள்ளது.நாடகத்திற்கான டிக்கெட்களை பெற, 'புக் மை ஷோ' வாயிலாகவோ 97106 33633 என்ற மொபைல் போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.இதுகுறித்து, பிரபல நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் அளித்த பேட்டி:என் அப்பா மற்றும் எழுத்தாளர் பட்டூ, சுகுண விலாஸ் சபாவில் நடித்து வந்தனர். புதிதாக ஏதாவது செய்ய வேண்டுமென நினைத்து, என் அப்பாவும், பட்டூவும் இணைந்து, 'யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட்' என்ற நாடக குழுவை ஆரம்பித்தனர். வழக்கமாக அந்த காலத்தில், நாடகத்தில் இடம் பெறும் இலக்கண தமிழை மாற்றி, சாதாரண வழக்கு சொல்லில் வசனம் அமைத்தனர். அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதே இதன் நோக்கம்.எங்கள் குழுவில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தாய் சந்தியா, சித்தி வித்யாவதி, ஜெயலலிதா, கமல், நாகேஷ், சோ, ஸ்ரீகாந்த், ராதாரவி, ராகினி, சுகுமாரி, லட்சுமி, அவரது அம்மா ருக்மணி, சவுகார்ஜானகியின் பேத்தி வைஷ்ணவி என பலர் நடித்துஉள்ளனர். வியட்நாம் வீடு சுந்தரம், மவுலி, விசு, சோ போன்ற பலர் எங்கள் நாடகத்திற்காக எழுதியுள்ளனர். 1961ல், என் நாடக மேடை பிரவேசமானது. 1952ல் ஆரம்பித்த எங்கள் நாடக குழு தற்போது, 70 ஆவது ஆண்டை கடந்துள்ளது. நான் 60 ஆண்டு கள் தொடர்ந்து நாடகத்தில் நடித்து வருகிறேன். என் சினிமா பயணமும் 51 ஆண்டுகளை கடந்து விட்டது.இதை நான் பெருமைக்கு சொல்லவில்லை. இந்தாண்டு எங்கள் நாடக குழுவின் 70ம் ஆண்டு. என் நாடக பயணம் 61ம் ஆண்டு, சினிமா பயணம் 51ம் ஆண்டு இந்த மூன்றும் சேர்ந்து வருகிறது. இது ஆண்டவன் கொடுத்த அருள்.இவ்வாறு, அவர்கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X