கோவை: டெங்கு கொசுப்புழுக்கள் இருந்ததால், கோவையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது, மாநகராட்சி நிர்வாகம்.கோவை மற்றும் சுற்றுப்பகுதிகளில், ஒரு மாதத்துக்கு மேலாக மழைப்பொழிவு காணப்படுகிறது.
சில தருணங்களில் கன மழையாகவும், சில நேரங்களில் சாரலாகவும் பெய்து வருகிறது.அதன் காரணமாக, நகரெங்கும் மழை நீர் தேங்கியிருக்கிறது. ரோடுகள் சேறும் சகதியுமாக மாறியிருக்கின்றன. மழை நீர் தேக்கத்தால் கொசுத்தொல்லை அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது.மழைக்கால நோய்கள் பரவ வாய்ப்பிருப்பதால், சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஆரம்பித்திருக்கின்றனர்.குப்பை அகற்றியதும், பிளீச்சிங் பவுடர் துாவுகின்றனர். மழை நீர் வடிகால் துார்வாரிய மண்ணை அள்ளியதும், அப்பகுதியிலும் பிளீச்சிங் பவுடர் துாவிச் செல்கின்றனர்.பருவநிலை மாற்றம் காரணமாக, கடந்த சில நாட்களாக, காய்ச்சல் பாதிப்பு ஏற்படத்துவங்கியிருக்கிறது. தண்ணீரை தேக்கி வைப்பவர்கள், கொசுப்புழு உருவாகாத வகையில், மூடி பாதுகாக்க, சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தி வருகின்றனர். டெங்கு கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள், வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்கின்றனர். தண்ணீர் தொட்டிகளில் 'அபேட்' மருந்து தெளிக்கின்றனர்.டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏ,டி.எஸ்., வகை கொசுக்கள் நல்ல தண்ணீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்பவை என்பதால், வீட்டிலுள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.நேற்றைய தினம், கிழக்கு மண்டலம், 33வது வார்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அதிக லார்வா கொசுப்புழுக்களை, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் தலைமையிலான சுகாதாரப் பிரிவினர் கண்டறிந்தனர்.இதன் காரணமாகவும், டெங்கு காய்ச்சல் பரவ காரணமாக இருந்ததாலும், மாநகராட்சி அதிகாரிகள், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏ,டி.எஸ்., வகை கொசுக்கள் நல்ல தண்ணீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்பவை என்பதால், வீட்டிலுள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE