செய்தி செய்தி

தமிழ்நாடு

கொரோனா இறப்பை உறுதி செய்ய குழு

Added : நவ 13, 2021
Share
Advertisement
கோவை: கோவை கலெக்டர் அலுவலகத்தில், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.தமிழக மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் மற்றும் பிறப்பு இறப்புக்கான இணைப்பதிவாளர் தேவசேனாதிபதி தலைமை வகித்தார். பிறப்பு, இறப்பு பதிவு குறித்து வருவாய்த்துறை, சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி துறை அலுவலர்களுடன் ஆய்வு நடத்தினார்.கூட்டத்தில், இணைப்பதிவாளர்

கோவை: கோவை கலெக்டர் அலுவலகத்தில், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.தமிழக மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் மற்றும் பிறப்பு இறப்புக்கான இணைப்பதிவாளர் தேவசேனாதிபதி தலைமை வகித்தார். பிறப்பு, இறப்பு பதிவு குறித்து வருவாய்த்துறை, சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி துறை அலுவலர்களுடன் ஆய்வு நடத்தினார்.கூட்டத்தில், இணைப்பதிவாளர் தேவசேனாதிபதி பேசியதாவது:கொரோனா தொற்று ஏற்படாமல் தற்கொலை, விபத்து போன்ற இதர காரணங்களினால் இறக்க நேரிட்டால், அது கொரோனா தொற்றாக ஏற்று கொள்ள இயலாது.கொரோனா தொற்று உறுதியாகி, குணமாக்க இயலாமல் வீட்டில் அல்லது மருத்துவமனையில், 30 நாட்களுக்குள் இறக்க நேரிட்டால், அது கொரோனா தொற்று இறப்பாக சான்றிதழ் வழங்கப்படும். இதுதொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி கொரோனா இறப்பினை உறுதி செய்யும் குழு, மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட பிறப்பு, இறப்பு பதிவாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் பெற கலெக்டரிடமும் விண்ணப்பிக்கலாம். 1969ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை நிகழ்ந்த பிறப்பு, இறப்பு பதிவேடுகளை, 75 லட்சம் ரூபாய் செலவில் இணையத்தில் பதிவேற்ற அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம், உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களிடம் நேரடியாக சென்று, இணைய வழி மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X