சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இளம்பெண் தற்கொலை முயற்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

Added : நவ 13, 2021
Share
Advertisement
கோவை: கோவை கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண், குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூர், தாராபுரத்தை சேர்ந்தவர் ஜெயபாரதி, 28. கணவர், இரு குழந்தைகளுடன் தாராபுரத்தில் வசித்தார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், கடந்த சில நாட்களாக கோவை உக்கடத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில், அவரது கணவருக்கு தாராபுரம் பகுதியை சேர்ந்த



கோவை: கோவை கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண், குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூர், தாராபுரத்தை சேர்ந்தவர் ஜெயபாரதி, 28. கணவர், இரு குழந்தைகளுடன் தாராபுரத்தில் வசித்தார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், கடந்த சில நாட்களாக கோவை உக்கடத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில், அவரது கணவருக்கு தாராபுரம் பகுதியை சேர்ந்த வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது தெரிந்து, கணவரிடம் கேள்வி எழுப்பினார். இருவரும் சேர்ந்து வாழலாம் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு அவரது கணவர் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.இதுகுறித்து பலமுறை கணவரிடம் பேசியும் பயனில்லாததால், மன விரக்தி அடைந்த பெண் நேற்று மதியம், 2:00 மணியளவில் தனது இரு குழந்தைகளுடன் கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். மறைத்து வைத்திருந்த கெரசினை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், விரைந்து வந்து கெரசினை பறிமுதல் செய்து, அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.போலீசார் அவரது பிரச்னை குறித்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்குமாறு அறிவுரை கூறி அனுப்பினர். இச்சம்பவத்தால் கோவை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X