பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளம் வடிந்த இடங்களில் குப்பை அகற்ற கமிஷனர் உத்தரவு

Added : நவ 13, 2021
Share
Advertisement
சென்னை : ''சென்னையில் மழைநீர் வடிந்த இடங்களில் தேங்கியுள்ள குப்பையை அகற்றுவதில் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது,'' என, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறினார்.இது குறித்து கமிஷனர் பேடி அளித்த பேட்டி:சென்னையில், அதிக குதிரை திறன் கொண்ட, 539 பம்புகள் பயன்படுத்தப்பட்டு, மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், 24 பம்புகள்

சென்னை : ''சென்னையில் மழைநீர் வடிந்த இடங்களில் தேங்கியுள்ள குப்பையை அகற்றுவதில் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது,'' என, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறினார்.

இது குறித்து கமிஷனர் பேடி அளித்த பேட்டி:சென்னையில், அதிக குதிரை திறன் கொண்ட, 539 பம்புகள் பயன்படுத்தப்பட்டு, மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், 24 பம்புகள் வரவழைக்கப்பட்டுள்ளன.மாநகராட்சியின் 10 சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழை நீர் நேற்று முன்தினம் வெளியேற்றப்பட்டு, போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.

நேற்று, கெங்குரெட்டி சுரங்கப்பாதை, மாணிக்கம் நகர் சுரங்கப்பாதையில் மழைநீர் அகற்றப்பட்டு, போக்குவரத்துக்கு விடப்பட்டு உள்ளது.கன மழை காரணமாக, 289 இடங்களில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, மாநகராட்சியின் நிவாரண மையங்களில் தங்க வைக்க, 169 மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

இதில், 44 நிவாரண மையங்களில், 2,249 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.பருவ மழையை முன்னிட்டு, அதிக மழை பாதிப்பு ஏற்பட்டால், அவ்விடங்களில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்பதற்கு ஏதுவாக, 55 பைபர் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன.மழைக்கால தொற்று மற்றும் தொற்றா நோய்கள் மக்களை பாதிக்காத வகையில், மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் 1,193 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதில், 50 ஆயிரத்து, 842 பேர் பயனடைந்துள்ளனர்.மழை நீர் வடிந்த இடங்களில், சுகாதாரத்தை காக்கும் வகையில், மழைக்கு அடித்து வரப்பட்ட குப்பை மற்றும் பிற கழிவுகளை உடனடியாக அகற்றி, அவ்விடத்தில் பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X