பொது செய்தி

தமிழ்நாடு

தாசில்தார் ஆபீசில் சிறப்பு கடன் முகாம்

Added : நவ 13, 2021
Share
Advertisement
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில், 'டாப் செட்கோ, டாம்கோ' துறை மூலம், சிறப்பு கடன் முகாம் நடைபெற உள்ளது.திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம், கல்வி கடன், தனிநபர் கடன் திட்டம், கறவைமாடு கடனுதவி, சுய

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில், 'டாப் செட்கோ, டாம்கோ' துறை மூலம், சிறப்பு கடன் முகாம் நடைபெற உள்ளது.

திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம், கல்வி கடன், தனிநபர் கடன் திட்டம், கறவைமாடு கடனுதவி, சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம் வழங்க முடிவெடுக்கப்பட்டது.

கடன் வழங்கும் சிறப்பு முகாம், திருவள்ளூர் மாவட்டத்தில் அந்தந்த தாசில்தார் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.இம்மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் சிறப்பு முகாமில் பங்கேற்று, விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X