செய்தி செய்தி

தமிழ்நாடு

அமைப்புசாரா தொழிலாளர்களை பதிவு செய்ய இதோ அழைப்பு

Added : நவ 13, 2021
Share
Advertisement
கோவை: அமைப்புசாரா தொழிலாளர்கள் பற்றிய விபரங்களை அமைப்புசாரா தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் பதிவேற்றம் செய்ய, தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மத்திய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பிரதமர் மோடியால் துவக்கப்பட்ட eshRAM and SHRAM SUVIDHA வலைதளத்தில், அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களின் விபரங்களை பதிவேற்றம் செய்து, டிச.,31ம் தேதிக்குள் இறுதி செய்ய அறிவுரை

கோவை: அமைப்புசாரா தொழிலாளர்கள் பற்றிய விபரங்களை அமைப்புசாரா தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் பதிவேற்றம் செய்ய, தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மத்திய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பிரதமர் மோடியால் துவக்கப்பட்ட eshRAM and SHRAM SUVIDHA வலைதளத்தில், அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களின் விபரங்களை பதிவேற்றம் செய்து, டிச.,31ம் தேதிக்குள் இறுதி செய்ய அறிவுரை வழஙகப்பட்டுள்ளது.இத்தளத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டப்பணியாளர்கள் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மாவட்ட மற்றும் மாநகர ஊரக வளர்ச்சி பணியாளர்கள், தெருவோர வியாபாரிகள், ரிக் ஷா டிரைவர்கள், கட்டுமான தொழிலாளர்கள், கட்டடம் மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்கள், செங்கல் சூளை தொழிலாளர்கள், சாலை ஓர வியாபாரிகள் உட்பட அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்கள் பற்றிய விபரங்களை பதிவேற்றுகின்றனர்.இதற்கு உதவும் வகையில் கோவை பாலசுந்தரம் சாலையிலுள்ள, தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) அலுவலகத்திலும், ராமநாதபுரத்திலுள்ள சமூக பாதுகாப்புத்திட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலகத்திலும் முகாம் நடைபெறுகிறது. அனைத்து தொழிலாளர்களும் பதிவு செய்து பயனடையலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X