கே.பி.ஆர்., கல்லுாரியில் நீர் தொழில்நுட்ப மையம்

Added : நவ 13, 2021
Share
Advertisement
கோவை: அரசூரில் உள்ள கே.பி.ஆர்., இன்ஜினியரிங் கல்லுாரி, கோவை எக்கி பம்ப்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, கல்லுாரி வளாகத்தில், எக்கி - கே.பி.ஆர்.ஐ.இ.டி., சர்வதேச நீர் தொழில்நுட்ப மையத்தை துவக்கியுள்ளது.ஜெர்மன் கன்சல் ஜெனரல் கரின் ஸ்டோல் கூறுகையில், ''தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் இணைவது, இன்ஜினியரிங் துறை வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். சிறந்த வேலைவாய்ப்பை உருவாக்குவதுடன்,

கோவை: அரசூரில் உள்ள கே.பி.ஆர்., இன்ஜினியரிங் கல்லுாரி, கோவை எக்கி பம்ப்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, கல்லுாரி வளாகத்தில், எக்கி - கே.பி.ஆர்.ஐ.இ.டி., சர்வதேச நீர் தொழில்நுட்ப மையத்தை துவக்கியுள்ளது.ஜெர்மன் கன்சல் ஜெனரல் கரின் ஸ்டோல் கூறுகையில், ''தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் இணைவது, இன்ஜினியரிங் துறை வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். சிறந்த வேலைவாய்ப்பை உருவாக்குவதுடன், தரமான உற்பத்தியையும் கொடுக்கும். இது, ஜெர்மனியில் உள்ளது போல், கற்றலையும், செயல்முறையையும் ஒருங்கிணைந்து வழங்கும்,'' என்றார்.கே.பி.ஆர்., கல்வி குழும தலைவர் ராமசாமி கூறுகையில், ''இந்த புதிய நீர் தொழில்நுட்ப மையத்தில், கல்லுாரியின் 45க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களும், எக்கி நிறுவனத்தின் சார்பில், 40க்கும் மேற்பட்ட, இன்ஜினியர்கள் இணைந்து, நிபுணத்துவத்தை உருவாக்குவர்,'' என்றார்.கே.பி.ஆர்., குழும செயல் இயக்குனர் அருண், தலைமை நிர்வாக அதிகாரி நடராஜன், முதல்வர் அகிலா, எக்கி பம்ப்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஆறுமுகம், இணை தலைமை நிர்வாக அதிகாரி கனிஷ்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X