பொது செய்தி

தமிழ்நாடு

குரோம்பேட்டை அரசு மருத்துவமனை வெள்ளத்தில் சிக்கியதற்கு காரணம்

Added : நவ 13, 2021
Share
Advertisement
தாம்பரம் : பச்சை மலையில் பெய்த மழை நீர், சிட்லப்பாக்கம் ஏரிக்கு செல்லாமல், ஜி.எஸ்.டி., சாலையில் வழிந்தோடியதே, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை வெள்ளத்தில் சிக்க காரணம் என தெரியவந்து உள்ளது.கன மழை காரணமாக, தாம்பரம் அடுத்த குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில், நேற்று முன்தினம் காலை முதல் வெள்ளம் சூழ்ந்தது.தொடர்ந்து, தேங்கிய மழை நீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்தன.
 குரோம்பேட்டை  அரசு மருத்துவமனை வெள்ளத்தில் சிக்கியதற்கு காரணம்

தாம்பரம் : பச்சை மலையில் பெய்த மழை நீர், சிட்லப்பாக்கம் ஏரிக்கு செல்லாமல், ஜி.எஸ்.டி., சாலையில் வழிந்தோடியதே, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை வெள்ளத்தில் சிக்க காரணம் என தெரியவந்து உள்ளது.

கன மழை காரணமாக, தாம்பரம் அடுத்த குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில், நேற்று முன்தினம் காலை முதல் வெள்ளம் சூழ்ந்தது.தொடர்ந்து, தேங்கிய மழை நீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்தன. வெள்ளம் பாதிக்க, பச்சை மலை பகுதியில் இருந்து வந்த மழை நீர், சிட்லப்பாக்கம் ஏரிக்கு செல்லாமல் திசை திரும்பி, ஜி.எஸ்.டி., சாலையில் வழிந்தோடியதே காரணம் என தெரியவந்துள்ளது.இது குறித்து சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

பச்சை மலையில் பெய்யும் மழை நீர், சர்வே எண் 228, 229ல் உள்ள ஜி.எஸ்.டி., சாலையை மேற்கு - கிழக்காக கடந்து, 210ல் உள்ள திறந்தவெளி கால்வாய், ரயில்வே கல்வெட்டு, எம்.ஐ.டி., வளாகத்தில் உள்ள குளம், மத்திய சேமிப்பு கிடங்கில் உள்ள கால்வாய் ஆகியவற்றை கடந்து, சிட்லப்பாக்கம் ஏரிக்கு வரவேண்டும்.ஆனால், ஜி.எஸ்.டி., சாலைக்கு கீழ் உள்ள கால்வாய், சேமிப்பு கிடங்கிலுள்ள கால்வாய், எம்.ஐ.டி., வளாகத்திலுள்ள குளம் ஆகியவை பராமரிப்பின்றி முழுதுமாக துார்க்கப்பட்டு உள்ளன.

இந்த கால்வாய்களில் செல்ல வேண்டிய மழை நீர், ஜி.எஸ்.டி., சாலையில் வழிந்தோடி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை மட்டுமின்றி, காசநோய் மருத்துவமனை, காவல், தீயணைப்பு நிலையங்களில் தேங்கி நிற்கிறது.இது ஆண்டுதோறும் தொடர்கிறது. சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு செய்து, கால்வாய்களை மீட்டால் மட்டுமே நிரந்தர தீர்வு ஏற்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X