பெயின்டர் கொலை; ஐந்து பேர் கைது

Added : நவ 13, 2021
Share
Advertisement
மதுக்கரை: மதுக்கரையை அடுத்த பாலத்துறை, முருகன் கோவில் வீதியை சேர்ந்த சிந்துவின் மகன் விஜய், 23; பெயின்டர். கடந்த ஒரு மாதத்திற்கு முன் இவரது நண்பர் சசிகுமார் கொடுத்த சேவலை விற்றுள்ளார்.இது தொடர்பாக, மதுக்கரை மார்க்கெட் பகுதியை சேர்ந்த சபீருக்கும், விஜய்க்குமிடையே பிரச்னை ஏற்பட்டது.இச்சூழலில் நேற்று முன்தினம் சபீர், விஜய்க்கு போன் செய்து, மதுக்கரை - நீலாம்பூர் பைபாஸ்

மதுக்கரை: மதுக்கரையை அடுத்த பாலத்துறை, முருகன் கோவில் வீதியை சேர்ந்த சிந்துவின் மகன் விஜய், 23; பெயின்டர். கடந்த ஒரு மாதத்திற்கு முன் இவரது நண்பர் சசிகுமார் கொடுத்த சேவலை விற்றுள்ளார்.இது தொடர்பாக, மதுக்கரை மார்க்கெட் பகுதியை சேர்ந்த சபீருக்கும், விஜய்க்குமிடையே பிரச்னை ஏற்பட்டது.இச்சூழலில் நேற்று முன்தினம் சபீர், விஜய்க்கு போன் செய்து, மதுக்கரை - நீலாம்பூர் பைபாஸ் சாலையிலிருந்து சிறிது தொலைவில், பாலத்துறை ரோட்டிலுள்ள காலியிடத்திற்கு வரவழைத்தார்.தனது உறவினர் விஷ்ணுவுடன் வந்த விஜயிடம் சபீர் வாக்குவாதம் செய்துள்ளார். தொடர்ந்து சபீர் தன்னிடமிருந்த கத்தியால் விஜயை குத்தினார். படுகாயமடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே பலியானார்.சபீர் உடன் வந்த தனது நண்பர்களான பினாஸ், தனுஷ் மற்றும் இருவருடன் அங்கிருந்து தப்பினார்.மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியவர்களை தேடினர். நேற்று சபீர், பினாஸ், தனுஷ், 21, போத்தனூர் கணேசபுரத்தை சேர்ந்த ஹரிஹரன், 21, சுந்தராபுரம், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த பரிதி வினாயகம், 25 ஆகியோர் சிக்கினர்.விசாரணை நடத்திய போலீசார், கொலைக்கு பயன்படுத்திய கத்தியை கைப்பற்றினர். ஐந்து பேரையும் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினர்.சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்த மதுக்கரை போலீசாருக்கு, எஸ்.பி., செல்வநாகரத்தினம் பாராட்டு தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X