தமிழ்நாடு

மழை நீர் வடிகால் அடைப்பு நீக்க இதோ வந்தாச்சு 'சூப்பர் சக்கர்'

Added : நவ 13, 2021
Share
Advertisement
கோவை: கோவையில் மழை நீர் செல்லும் பகுதியில் உள்ள அடைப்புகளை நீக்குவதற்கு, 'சூப்பர் சக்கர்' வாகனத்தை, மாநகராட்சி தருவித்துள்ளது.கோவை நகர் பகுதியில் உள்ள மழை நீர் வடிகாலில், பிளாஸ்டிக் கழிவு மற்றும் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மழை நீர், வடிகாலில் செல்லாமல் ரோட்டில் வழிந்தோடுவதால் மக்கள் சிரமப்படுகின்றனர். ரோடும் சேதமடைகிறது.வாய்க்கால் மற்றும் ஓடைகளில் உள்ள

கோவை: கோவையில் மழை நீர் செல்லும் பகுதியில் உள்ள அடைப்புகளை நீக்குவதற்கு, 'சூப்பர் சக்கர்' வாகனத்தை, மாநகராட்சி தருவித்துள்ளது.கோவை நகர் பகுதியில் உள்ள மழை நீர் வடிகாலில், பிளாஸ்டிக் கழிவு மற்றும் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மழை நீர், வடிகாலில் செல்லாமல் ரோட்டில் வழிந்தோடுவதால் மக்கள் சிரமப்படுகின்றனர். ரோடும் சேதமடைகிறது.வாய்க்கால் மற்றும் ஓடைகளில் உள்ள அடைப்புகளை பொக்லைன் இயந்திரங்களால் அள்ளி, வழியேற்படுத்தப்படுகிறது. மழை நீர் வடிகாலில் உள்ள அடைப்புகளை, துாய்மை பணியாளர்களை இறக்கி, பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது.உதாரணத்துக்கு, சுங்கம் சந்திப்பில் இருந்து போலீஸ் கந்தசாமி லைன் வீதி, மசால் லே-அவுட் பகுதியில் உள்ள மழை நீர் வடிகாலில் உள்ள அடைப்புகளை அகற்ற, பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதுபோன்ற இடங்களிலும், பாதாள சாக்கடை மேனுவலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளையும் நீக்க, அதிக திறன் கொண்ட, 'சூப்பர் சக்கர்' வாகனத்தை, மாநகராட்சி தருவித்துள்ளது.இது, மணிக்கு, 85 ஆயிரம் லிட்டர் உறிஞ்சு திறன் கொண்டது. நிமிடத்துக்கு, 480 லிட்டர் வேகத்தில் நீரை செலுத்தும் திறனில் அடைப்பு நீக்கும். இவ்வாகனத்தில் சேகரமாகும் கழிவு நீரை மறுசுழற்சி செய்து, மீண்டும் உபயோகிக்கலாம்.திருச்சி ரோட்டில் ராமநாதபுரம் சந்திப்பு, ஒலம்பஸ், நஞ்சுண்டாபுரம், கிருஷ்ணசாமி ரோடு, ஸ்டேட் பாங்க் ரோடு போன்ற முக்கிய சாலைகளில் உள்ள மழை நீர் வடிகால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகள், போர்க்கால அடிப்படையில் அகற்றப்படுகிறது.இப்பணிகளை விரைந்து முடிக்க, மண்டல அதிகாரிகளுக்கு கமிஷனர் ராஜகோபால் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X