சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பழுதான பள்ளி கட்டடம் அகற்றுவதற்கு தீர்மானம்

Added : நவ 13, 2021
Share
Advertisement
கடம்பத்துார் : கடம்பத்துார் ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய குழு தலைவர் சுஜாதா தலைமையில் கூட்டம் நடந்தது. ஒன்றிய அலுவலர்கள் ராம்குமார், வெங்கடசன் மற்றும் 14 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.முன்னதாக, விபத்தில் பலியான துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோட்டீஸ்வரனுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின், வழக்கம் போல் வரவு - செலவு கணக்கு வாசிக்கப்பட்டது.தொடர்ந்து, கடம்பத்துார்

கடம்பத்துார் : கடம்பத்துார் ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய குழு தலைவர் சுஜாதா தலைமையில் கூட்டம் நடந்தது. ஒன்றிய அலுவலர்கள் ராம்குமார், வெங்கடசன் மற்றும் 14 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக, விபத்தில் பலியான துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோட்டீஸ்வரனுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின், வழக்கம் போல் வரவு - செலவு கணக்கு வாசிக்கப்பட்டது.தொடர்ந்து, கடம்பத்துார் ஒன்றியத்தில் வயலுார், கடம்பத்துார், பிரையாங்குப்பம், செஞ்சி, வெங்கத்துார், கூவம், புதுவள்ளூர், கூவம் ஆகிய ஊராட்சிகளில், 40 ஆண்டுகள் பழமையான பழுதடைந்து பயன்பாடில்லாத பள்ளிக்கட்டங்களை இடித்து அகற்ற, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதேபோல் சிட்ரம்பாக்கம், இலுப்பூர், கொப்பூர், கூவம், அதிகத்துார், பிரையாங்குப்பம், கொட்டையூர் ஆகிய ஊராட்சிகளில், அரசு பள்ளிகளில் பழுதடைந்து பயன்பாடற்ற நிலையில் உள்ள சமையலறைக் கட்டடங்களை அகற்றவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X