சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுரங்கப்பாதையில் சிக்கிய பஸ் படகில் பயணியர் மீட்பு

Added : நவ 13, 2021
Share
Advertisement
தி.நகர் : சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் அரசு பேருந்து சிக்கியதால், பயணியர் படகில் பத்திரமாக மீட்கப்பட்டனர்.சென்னையில் சில தினங்களாக கனமழை பெய்ததால், மழை நீர் தேங்கியுள்ள பல சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.அதன்படி, கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதை நேற்று மூடப்பட்டது. நேற்று காலை, இந்த சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த
 சுரங்கப்பாதையில் சிக்கிய பஸ் படகில் பயணியர் மீட்பு

தி.நகர் : சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் அரசு பேருந்து சிக்கியதால், பயணியர் படகில் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சென்னையில் சில தினங்களாக கனமழை பெய்ததால், மழை நீர் தேங்கியுள்ள பல சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.அதன்படி, கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதை நேற்று மூடப்பட்டது. நேற்று காலை, இந்த சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழை நீரை, மாநகராட்சியினர் வெளியேற்றிக் கொண்டிருந்தனர்.

அப்போது, காலை 6:20 மணிக்கு, ரெட்டிக்குப்பம் சாலை வழியாக அய்யப்பன்தாங்கல் - மந்தைவெளி நோக்கிச் சென்ற தடம் எண் 12எம் அரசு பேருந்து வந்தது. அங்கிருந்த தடுப்பை எடுத்துவிட்டு, ஓட்டுனர் பூங்காவனம் சுரங்கப்பாதையில் பேருந்தை இயக்கியுள்ளார்.ஐந்து அடி தண்ணீரில் இயக்கப்பட்டதால், பயணியருடன் சுரங்கப்பாதை நடுவே பேருந்து சிக்கியது. தகவலின்படி வந்த தீயணைப்பு துறையினர், ரப்பர் படகு வாயிலாக ஓட்டுனர், நடத்துனர் மற்றும் நான்கு பயணியரை பத்திரமாக மீட்டனர். பின், சங்கிலிகள் கட்டி சுரங்கப்பாதையில் சிக்கிய பேருந்து மீட்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X