சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

Added : நவ 13, 2021
Share
Advertisement
பொன்னேரி : ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அணைக்கட்டுகளில் இருந்து, 25 ஆயிரம் கனஅடி நீர், பழவேற்காடு ஏரிக்கு செல்கிறது.தொடர் மழை மற்றும் பிச்சாட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றம் காரணமாக ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.பொன்னேரி பகுதியில் உள்ள லட்சுமிபுரம், ரெட்டிப்பாளையம் அணைக்கட்டுகள் நிரம்பி, 25 ஆயிரம் கனஅடி உபரி நீர், பழவேற்காடு
ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

பொன்னேரி : ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அணைக்கட்டுகளில் இருந்து, 25 ஆயிரம் கனஅடி நீர், பழவேற்காடு ஏரிக்கு செல்கிறது.தொடர் மழை மற்றும் பிச்சாட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றம் காரணமாக ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

பொன்னேரி பகுதியில் உள்ள லட்சுமிபுரம், ரெட்டிப்பாளையம் அணைக்கட்டுகள் நிரம்பி, 25 ஆயிரம் கனஅடி உபரி நீர், பழவேற்காடு ஏரிக்கு செல்கிறது.ஆற்றின் இரு கரைகளை தொட்டு மழை நீர் ஓடுவதால், பெரும்பேடு, சோமஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு, கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. வஞ்சிவாக்கம், போலாச்சியம்மன்குளம் உள்ளிட்ட பல கிராமங்களையும் தண்ணீர் சூழ்ந்து உள்ளது.

மேற்கண்ட கிராமங்களில் இருந்து வெளியேறும் தண்ணீர் பொன்னேரி- - பழவேற்காடு சாலையை கடந்து அவுரிவாக்கம், தொட்டிமேடு கிராமங்கள் வழியாக உவர்ப்பு நீர் ஏரிக்கு செல்கிறது.பழவேற்காடு சாலையில், 2 அடி உயரத்திற்கு தண்ணீர் செல்வதால் அத்தியாவசிய வாகனங்கள் தவிர்த்து மற்ற வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.

ஆற்றின் இரு கரைகளிலும் கசிவு உள்ள பகுதிகளை கண்டறிந்து, பொதுப்பணித் துறையினர் மணல் மூட்டைகளை அடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.காவல், சுகாதாரம், வருவாய் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறையினர் கரையோர கிராமங்களில் முகாமிட்டு தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X