சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வைகை அணையில் 2 பெண் உடல்கள் மீட்பு

Added : நவ 13, 2021
Share
Advertisement
தேனி:தேனி வைகை அணையில் நேற்று இரு பெண்களின் உடல்கள் மீட்கப்பட்டன.வடகிழக்கு பருவ மழையால் தேனி வைகை ஆற்றில் அதிகளவில் நீர் செல்கிறது. கருவேல்நாயக்கன்பட்டி அருகே வைகை ஆற்றில் உடல் மிதந்தது என தெரிவிக்கப்பட்டது. தேனி தீயணைப்பு அலுவலர் பொன்னம்பலம் தலைமையில் சிறப்பு தீயணைப்பு அலுவலர்கள் கர்ணன், சின்னசாமி மற்றும் வீரர்கள் கருவேல்நாயக்கன்பட்டி, அரப்படிதேவன்பட்டி

தேனி:தேனி வைகை அணையில் நேற்று இரு பெண்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

வடகிழக்கு பருவ மழையால் தேனி வைகை ஆற்றில் அதிகளவில் நீர் செல்கிறது. கருவேல்நாயக்கன்பட்டி அருகே வைகை ஆற்றில் உடல் மிதந்தது என தெரிவிக்கப்பட்டது. தேனி தீயணைப்பு அலுவலர் பொன்னம்பலம் தலைமையில் சிறப்பு தீயணைப்பு அலுவலர்கள் கர்ணன், சின்னசாமி மற்றும் வீரர்கள் கருவேல்நாயக்கன்பட்டி, அரப்படிதேவன்பட்டி பகுதிகளில் தேடினர். நீண்டி நேரம் தேடியும் உடல் கிடைக்கவில்லை.

இதற்கிடையே வைகை அணை கரட்டுப்பட்டி பகுதியில் இரு பெண்களின் உடல்களை போலீசார் மீட்டனர். ஒருவர் கருவேல்நாயக்கன்பட்டி முத்துராமலிங்கம் 4வது தெரு குபேந்திரன் மனைவி ஜெயக்கொடி 65, என தெரியவந்தது. இன்னொருவரின் உடல் அழுகி இருந்ததால் அடையாளம் தெரியவில்லை. இவர்கள் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டனரா அல்லது இறப்புக்கு வேறு காரணம் உள்ளதா என க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X