பொது செய்தி

தமிழ்நாடு

புதிய வழிகளில் விமானங்கள் துவக்க அதிகாரிகள் வலியுறுத்தல்

Added : நவ 13, 2021
Share
Advertisement
கலபுரகி : நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு கலபுரகி விமான நிலையம் இணைப்பு ஏற்படுத்துகிறது. சில புதிய பாதைகளில் விமான போக்குவரத்து துவக்க வாய்ப்பளிக்கும்படி, விமான நிலைய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். கொரோனா கட்டுக்குள் வந்த பின் விமான போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது. கலபுரகி விமான நிலையத்துக்கு பயணியர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. சில புதிய பாதைகளில், விமான

கலபுரகி : நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு கலபுரகி விமான நிலையம் இணைப்பு ஏற்படுத்துகிறது.

சில புதிய பாதைகளில் விமான போக்குவரத்து துவக்க வாய்ப்பளிக்கும்படி, விமான நிலைய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். கொரோனா கட்டுக்குள் வந்த பின் விமான போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது. கலபுரகி விமான நிலையத்துக்கு பயணியர் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

சில புதிய பாதைகளில், விமான போக்குவரத்து துவங்கும்படி நிறுவனங்களை, அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். அதிகாரி ஒருவர் கூறியதாவது:கலபுரகி -- மும்பை, கலபுரகி -- கோவா, கலபுரகி -- அகமதாபாத் பாதையில், விமான போக்குவரத்தை துவங்கினால், பயணியருக்கு உதவியாக இருக்கும். தற்போது கலபுரகியிலிருந்து பெங்களூரு, டில்லி, திருப்பதிக்கு விமான போக்குவரத்து நடக்கிறது.

இதற்கு முன் கலபுரகி -- மும்பை பாதையில், சோதனை முறையில் நடத்தப்பட்டது.முதலில் வாரத்தில் இரண்டு நாட்கள், அதன்பின் வாரத்தின் அனைத்து நாட்களும் நடத்த திட்டமிடப்பட்டது. கொரோனாவால் செயல்படவில்லை. தற்போது தொற்று குறைந்ததால், கலபுரகி -- மும்பை பாதையில் துவங்கும்படி, கோரிக்கை அதிகரித்துள்ளது. எனவே நாங்களும் 'ஸ்டார் ஏர்', 'அலயன்ஸ் ஏர்' விமான நிறுவனங்களை கோரியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X