பொது செய்தி

தமிழ்நாடு

தொண்டு நிறுவனங்கள் பொருட்கள் வழங்கலாம்

Added : நவ 13, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : 'சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்க, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும்' என, மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.சென்னை மாநகராட்சி செய்திக் குறிப்பு:சென்னையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியிலுள்ள மக்களுக்கு தேவையான உணவு, அனைத்து மண்டலங்களிலும் தயாரிக்கப்பட்டு, அந்தந்த இடத்திற்கே சென்று

சென்னை : 'சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்க, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும்' என, மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னை மாநகராட்சி செய்திக் குறிப்பு:சென்னையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியிலுள்ள மக்களுக்கு தேவையான உணவு, அனைத்து மண்டலங்களிலும் தயாரிக்கப்பட்டு, அந்தந்த இடத்திற்கே சென்று வினியோகம் செய்யப்படுகிறது.மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய், பாய், தலையணை, போர்வை, சோப்பு போன்ற பொருட்களை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வழங்க முன்வந்தால், சென்னை, ஷெனாய் நகர், கீழ்ப்பாக்கம் கார்டன் காலனி, நியூ ஆவடி சாலை அருகே உள்ள, ஜெ.ஜெ., உள் விளையாட்டு அரங்கத்திற்கு நேரில் கொண்டு வந்து வழங்கலாம்.

அழுகும் பொருட்கள், சமைக்கப்பட்ட உணவு வகைகள் மற்றும் பழைய பொருட்கள் போன்றவற்றை வழங்குவதை தவிர்க்க வேண்டும்.மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள நிவாரண பணிகளுக்கு, உடன் இணைந்து பணி செய்ய விருப்பம் உள்ளவர்கள், https://forms.gle/NkEVTjvsH8hKTvoo9 என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.மேலும் விபரங்களுக்கு, 94450 25821 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-நவ-202114:46:12 IST Report Abuse
Gopalakrishnan S தொண்டு நிறுவனங்கள் பொருட்கள் வழங்கலாம் ... நாங்கள் எங்கள் பெயர் ஸ்டிக்கர் ஒட்டி விநியோகம் செய்வோம் !
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X