பொது செய்தி

இந்தியா

பி.யு.சி.,யில் 7.2 லட்சம் மாணவர்கள் இரண்டாம் ஆண்டில் சேர்க்கை மந்தம்

Added : நவ 13, 2021
Share
Advertisement
பெங்களூரு : நடப்பு கல்வியாண்டில் பி.யு.சி., முதலாண்டு சேர்க்கையில் 7.2 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.கர்நாடகாவில் கொரோனா பாதிப்பால் கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது.தேர்வு எழுதாத மாணவர்கள் தவிர அனைவரும் தேர்ச்சி பெற்றதால் மேல்நிலை கல்விக்கான சேர்க்கை உயர்ந்துள்ளது.இதன்படி, நடப்பாண்டில் 7.2

பெங்களூரு : நடப்பு கல்வியாண்டில் பி.யு.சி., முதலாண்டு சேர்க்கையில் 7.2 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.கர்நாடகாவில் கொரோனா பாதிப்பால் கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது.

தேர்வு எழுதாத மாணவர்கள் தவிர அனைவரும் தேர்ச்சி பெற்றதால் மேல்நிலை கல்விக்கான சேர்க்கை உயர்ந்துள்ளது.இதன்படி, நடப்பாண்டில் 7.2 லட்சம் மாணவர்கள் பி.யு.சி., முதலாண்டு மாணவர் சேர்க்கையில் பதிவு செய்துள்ளனர்.கடந்த சில கல்வியாண்டுகளுடன் ஒப்பிடுகையில் அதிகமான சேர்க்கை பதிவாகவும் உள்ளது.ஆனால், இரண்டாமாண்டு சேர்க்கையில் நிலை மாறி, 6 லட்சத்துக்கும் குறைவான மாணவர்கள் தான் பதிவு செய்துள்ளனர்.

கடந்தாண்டு பி.யூ.சி., முதலாண்டில் 6.2 லட்சம் மாணவர்கள் சேர்க்கை பதிவானது. 'இதில், நடப்பாண்டில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் இடை நின்றுள்ளதால், இரண்டாமாண்டு சேர்க்கை பதிவு குறைந்துள்ளது.பி.யு., கல்வித்துறை இயக்குனர் ஸ்னேகல் கூறியதாவது:ஒவ்வொரு கல்வியாண்டிலும், பி.யு.சி., இரண்டாமாண்டு சேர்க்கை குறைவாகவே நடக்கிறது. குடும்ப சூழல், இடம் பெயர்தல் முக்கிய காரணமாக உள்ளது.

மாணவர்களின் இடைநிற்றல் குறித்து ஆய்வு நடத்த கல்லுாரி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு முடித்த 1.5 லட்சம் மாணவர்கள், இன்னும் பி.யு.சி., முதலாண்டின் சேர்க்கையில் பதிவு செய்யாமல் உள்ளனர்.அவர்கள் டிப்ளமோ படிப்பு தேர்வு செய்துள்ளனரா, இடைநிற்றல் காரணமா என அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X