அரசியல் செய்தி

தமிழ்நாடு

டெல்டா மாவட்டங்களில் முதல்வர் இன்று ஆய்வு

Added : நவ 13, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:டெல்டா மாவட்டங்களில் மழை பாதிப்புகளை, முதல்வர் ஸ்டாலின் இன்று பார்வையிடுகிறார்; விவசாயிகளை சந்தித்து சேத விபரங்கள் குறித்தும் கேட்டறிகிறார். முதல்வர் ஸ்டாலின், சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று, ஐந்து நாட்களாக ஆய்வு செய்தார்; குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை விரைந்து வெளியேற்ற உத்தரவிட்டார். ஆறாவது நாளான நேற்று, சென்னை
 டெல்டா மாவட்டங்களில்  முதல்வர் இன்று ஆய்வு

சென்னை:டெல்டா மாவட்டங்களில் மழை பாதிப்புகளை, முதல்வர் ஸ்டாலின் இன்று பார்வையிடுகிறார்;

விவசாயிகளை சந்தித்து சேத விபரங்கள் குறித்தும் கேட்டறிகிறார். முதல்வர் ஸ்டாலின், சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று, ஐந்து நாட்களாக ஆய்வு செய்தார்;

குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை விரைந்து வெளியேற்ற உத்தரவிட்டார். ஆறாவது நாளான நேற்று, சென்னை தேனாம்பேட்டையில் தொற்று நோய் பரவாமல் தடுக்க, மருத்துவ முகாம்களை துவக்கி வைத்தார். பின், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டார். வண்டலுார் தாலுகாவில் வசிக்கும் இருளர், பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த, 33 குடும்பங்களுக்கு, கீழக்கோட்டையூர் கிராமத்தில் இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். முகாமில் தங்கியுள்ளோருக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார்.

ஆய்வுக்கு சென்ற வழியில், கீழக்கோட்டையூரில் உள்ள டீ கடையில் டீ குடித்து, பொதுமக்களிடம் கலந்துரையாடினார். காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனுார், அடையாறு ஆறு துவங்கும் இடம், மண்ணிவாக்கம் பகுதி, அடையாற்று பாலத்தில், கன மழையால் ஏற்பட்டு உள்ள நீர் வரத்தை ஆய்வு செய்தார். முடிச்சூர், சி.எஸ்.ஐ., செயின்ட் பால்ஸ் பள்ளியில் உள்ள நிவாரண முகாம் மற்றும் மருத்துவ முகாமை ஆய்வு செய்தார். அங்கிருந்து வெளியே வந்த போது, முதல்வரிடம் அப்பகுதி மக்கள், 'எங்கள் ஊரை காப்பாற்றுங்கள்' என கேட்டனர். அவர்களுக்கு, ஸ்டாலின் ஆறுதல் கூறிவிட்டு சென்றார்.

தாம்பரம் பஸ் நிலையத்தில் மழை பாதிப்புகளை பார்வையிட்டதுடன், துாய்மை பணியாளர்களிடம், தேவைப்படும் உதவிகளை கேட்டறிந்தார். முதல்வருடன் அமைச்சர்கள் அன்பரசன், சுப்பிரமணியன், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அதிகாரிகள் சென்றனர். ஆய்வுப்பணி முடித்து வந்த முதல்வர், காரில் புதுச்சேரி புறப்பட்டு சென்றார்.

இன்று காலை 7:30 மணிக்கு, கடலுார் மாவட்டம் அரங்கமங்கலம், அடூர் அகரம்; காலை 9:30க்கு மயிலாடுதுறை மாவட்டம், இருக்கூர், தரங்கம்பாடி பகுதிகளுக்கு செல்கிறார்.நீரில் மூழ்கிய பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். பாதிப்புகள் குறித்து, விவசாயிகளிடமும் கேட்டறிகிறார். காலை 11:30க்கு நாகப்பட்டினம் மாவட்டம், கருங்கனி, அருந்தவபுலம்; திருவாரூர் மாவட்டம், ராயநல்லுார், புழுதிக்குடி; மாலை 3:30 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டம், பெரியக்கோட்டை பகுதிகளை பார்வையிடுகிறார்; இரவு சென்னை திரும்புகிறார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
13-நவ-202104:07:44 IST Report Abuse
BASKAR TETCHANA இப்போது தான் முதல்வர் சென்னையை சுற்றி பார்த்தார். ஆறு நாட்களாக குறிப்பிட்ட இடங்களை மட்டும் கயிறு கட்டிய இடங்களையும் இடிந்து போக நிலையில் உள்ள வீடுகளையும் பார்த்தார். மற்றபடி எல்லா இடங்களிலும் போட்டோவுக்கு பல விதமாக பாஸ் கொடுத்து படங்களை பிடித்து கொண்டார். மற்றபடி மாமூல் தான் டி கடையில் டி குடிப்பது போன்றவைகள் நடந்தன. இப்போது தென் மாவட்டங்களுக்கு செல்ல இருக்கிறார் அங்கேயும் இதே சினிமா தான் நடக்கும். மக்களுக்கு உருப்படியான காரியங்கள் செய்ய துப்பில்லை.ஒரு தொப்பி ஒரு கொட்டு கை தட்ட ஒரு பாத்து ஐ.எ.எஸ். ஐ.பி.எஸ் காரர்கள் சில அல்லக்கைகள் முக்கியமாக இந்த சேகர்பாபு தயாநிதிமாறன் போன்றவர்கள் அவரை சுற்றி நிற்பார்கள். இது தான் இவருடைய ஆய்வு செயல்கள் மற்றபடி ஒன்றும் கிழிக்கவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X