பொது செய்தி

இந்தியா

மருத்துவ சிகிச்சை அளிக்கும் 'ரோபோ' பெங்களூரு மருத்துவமனைகள் முன்மாதிரி

Added : நவ 13, 2021
Share
Advertisement
பெங்களூரு : பெங்களூரின் இரண்டு மருத்துவமனைகளில், 'ரோபோ' எனப்படும் மனித இயந்திரங்கள் மூலமாக, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.சில மாதங்களுக்கு முன், கொரோனா இரண்டாம் அலையால் நோயாளிகள் அதிகமாக இருந்த மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவர்கள் பற்றாக்குறையாக இருந்தனர்.பல மருத்துவர்கள், செவிலியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். முழுமையான

பெங்களூரு : பெங்களூரின் இரண்டு மருத்துவமனைகளில், 'ரோபோ' எனப்படும் மனித இயந்திரங்கள் மூலமாக, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன், கொரோனா இரண்டாம் அலையால் நோயாளிகள் அதிகமாக இருந்த மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவர்கள் பற்றாக்குறையாக இருந்தனர்.பல மருத்துவர்கள், செவிலியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

முழுமையான சிகிச்சை கிடைக்காமலும், பலர் உயிரிழந்தனர்.இனி வரும் சூழலில், இது போன்ற பிரச்னைகளை தவிர்க்க ரோபோக்கள் மூலம் நோயாளிகளை பராமரிக்கும் முறையை, பெங்களூரின் இரண்டு மருத்துவமனைகள் செயல்படுத்தியுள்ளன.பெங்களூரின் விக்டோரியா மருத்துவமனை மற்றும் ஹூப்பள்ளியில் உள்ள கே.எம்.எஸ்., மருத்துவமனைகளில், ஐ.சி.யு., வார்டில் நோயாளிகளை கவனித்து கொள்வதற்கு உதவும் வகையில் ரோபோக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேல் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் 'டெமி' எனப்படும் இந்த ரோபோக்கள், ஐ.சி.யு., வார்டில் உள்ள நோயாளிகளின் உடல்நிலையை குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை கண்காணித்து பதிவுகளை அளிக்கிறது.இந்த ரோபோக்களுக்கு ஆடியோ மற்றும் வீடியோ மூலமாக தொடர்பு கொள்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.மாநிலத்தில் முதல் முறையாக பெங்களூரின் இரண்டு மருத்துவமனைகளில் ரோபோக்கள் நியமிக்கப்பட்டிருப்பது ப

லரின் வரவேற்பை பெற்றுள்ளது.ஒரு சில மாவட்ட மருத்துவமனைகளில் ஐ.சி.யு., வார்டில் கேமரா பொருத்தப்பட்டு, நோயாளிகளின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டது.இதன் அடுத்த கட்டமாக, ரோபோக்கள் நியமிக்கப்பட்டிருப்பது கூடுதல் வசதியை வழங்குகிறது.இந்த மருத்துவமனை மருத்துவர்கள், ரோபோக்களை இயக்குவதற்கான செயலியை தங்களின் மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்துகொண்டு அதன் மூலம் அவற்றுக்கான ஆலோசனை வழங்குகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X