சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயில் பாதையில் சரிந்து விழுந்த பாறைகள்

Added : நவ 13, 2021
Share
Advertisement
தர்மபுரி:தர்மபுரி மாவட்டம், முத்தம்பட்டி மலைப் பாதையில் பாறைகள் சரிந்து விழுந்ததில், எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 2,348 பயணியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.கேரள மாநிலம் கண்ணணுாரில் இருந்து, கர்நாடக மாநிலம், யஸ்வந்பூருக்கு, எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பியது. மீட்புப் பணிநேற்று அதிகாலை, 4:30 மணியளவில் தர்மபுரி மாவட்டம், முத்தம்பட்டி
 ரயில் பாதையில் சரிந்து விழுந்த பாறைகள்

தர்மபுரி:தர்மபுரி மாவட்டம், முத்தம்பட்டி மலைப் பாதையில் பாறைகள் சரிந்து விழுந்ததில், எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 2,348 பயணியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கேரள மாநிலம் கண்ணணுாரில் இருந்து, கர்நாடக மாநிலம், யஸ்வந்பூருக்கு, எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பியது.


மீட்புப் பணி

நேற்று அதிகாலை, 4:30 மணியளவில் தர்மபுரி மாவட்டம், முத்தம்பட்டி ரயில் நிறுத்தம் அருகே, வனப் பகுதியில் தண்டவாளத்தின் இருபுறமும் பாறைகள் மிகுந்த வழித்தடத்தில், ஆஞ்சநேயர் கோவில் அருகே ரயில் வந்து கொண்டு இருந்தது.மழை காரணமாக, அப்பகுதியில் சிறு சிறு மண் சரிவு ஏற்பட்டுள்ளது. ரயில் வேகமாக சென்றதால், தண்டவாளத்தில் ஏற்பட்ட அதிர்வு காரணமாக, பாறைகள் சரிந்து ரயில் பெட்டிகள் மீது விழுந்தன.

இதனால், ரயிலின் ஏழு பெட்டிகள் தடம் புரண்டு, தண்டவாளத்தை விட்டு விலகின. உடனே, ரயில் நிறுத்தப்பட்டது. இதில், பயணியர் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. பெங்களூரு ரயில்வே கோட்ட பணியாளர்கள், கோட்ட மேலாளர் ஸ்ரீஷ்யாம்சிங் தலைமையில் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.


மாற்று வழியில் இயக்கம்

தடம் புரண்ட ஏழு பெட்டிகளை தவிர்த்து, மற்ற பெட்டிகளை சேலம் மற்றும் பெங்ளூருக்கு மாற்று இன்ஜின் மூலம் கொண்டு சென்றனர். தடம் புரண்ட பெட்டிகளை மீட்கும் பணியில் ரயில்வே பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.ரயிலில் பயணம் செய்த 2,348 பயணியரும் பத்திரமாக மீட்கப்பட்டு, பஸ்களில் சேலம், திருப்பத்துாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சேலம் - யஷ்வந்த்பூர் சிறப்பு ரயில், இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டது. நேற்று காலை 8:30 மணிக்கு கோவையில் புறப்பட்ட கோவை - லோகமான்ய திலக் சிறப்பு ரயில், காலை 9:10க்கு புறப்பட்ட எர்ணாகுளம் - பெங்களூரு சிறப்பு ரயில் ஆகியவை, சேலம், திருப்பத்துார், ஜோலார்பேட்டை, பங்காருபேட்டை என, மாற்று வழியில் இயக்கப்பட்டன.பெங்களூரு - நாகர்கோவில், மைசூரு - மயிலாடுதுறை சிறப்பு ரயில்கள், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம் வழியே இயக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X