விழாவில் கூட்ட நெரிசல் இந்திய மாணவி மரணம்

Added : நவ 13, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஹூஸ்டன்:அமெரிக்காவில் நடந்த இசை திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த இந்திய வம்சாவளி மாணவி சிகிச்சைப் பலனின்றி உயிர் இழந்தார்.அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சமீபத்தில் இசைத் திருவிழா நடந்தது. பிரபல 'ராப்' பாடகர் டிராவிஸ் ஸ்காட் பங்கேற்ற அந்த விழாவில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதனால் அந்த பகுதியில் கடும் கூட்ட நெரிசல்
 விழாவில் கூட்ட நெரிசல் இந்திய மாணவி மரணம்

ஹூஸ்டன்:அமெரிக்காவில் நடந்த இசை திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த இந்திய வம்சாவளி மாணவி சிகிச்சைப் பலனின்றி உயிர் இழந்தார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சமீபத்தில் இசைத் திருவிழா நடந்தது. பிரபல 'ராப்' பாடகர் டிராவிஸ் ஸ்காட் பங்கேற்ற அந்த விழாவில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதனால் அந்த பகுதியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.இதில் பங்கேற்ற பலரும் நெரிசலில் சிக்கி கீழே விழுந்தனர்.

அந்த கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பார்தி ஷஹானி, 22, என்ற மாணவி படுகாயமடைந்தார்.அவர் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளையில் காயம் ஏற்பட்ட அவருக்கு, 'வென்டிலேட்டர்' உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 10ம் தேதி, அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதைஅடுத்து அந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
17-நவ-202107:39:37 IST Report Abuse
Sanny நம்ம ஊரில் எவ்வளவு கூட்டம் இருந்தாலும், நம்மாளுங்க சமாளித்து வருவாங்க. அமெரிக்காவில் போதை கூட்டம், யாரை தள்ளுகிறோம், யாரை மிதிக்கிறோம் என்று தெரியாது ஆட்டம் போடும் கூட்டம். இந்த மாதிரி நிகழிச்சிகளை நம்மவர்கள் தவிர்க்கணும். ஆழத்தை அனுதாபங்கள் குடும்பத்துக்கு.
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
15-நவ-202110:25:13 IST Report Abuse
Ram அமெரிக்கா இந்தியாவாகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X