பொது செய்தி

தமிழ்நாடு

செம்மஞ்சேரி காவல் நிலையம் இடமாற்றம்

Added : நவ 13, 2021
Share
Advertisement
சோழிங்கநல்லுார் : கன மழை காரணமாக கட்டடம் பாதிக்கப்பட்டுள்ளதால், செம்மஞ்சேரி காவல் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.துரைப்பாக்கம் காவல் நிலைய எல்லையில் இருந்து, குறிப்பிட்ட பகுதியை பிரித்து, 2009ல் செம்மஞ்சேரி காவல் நிலையம் துவக்கப்பட்டது.ராஜிவ் காந்தி சாலை, சோழிங்கநல்லுார் நான்குமுனை சந்திப்பில் உள்ள வருவாய்த் துறை கட்டடத்தில், காவல் நிலையம் செயல்பட்டு

சோழிங்கநல்லுார் : கன மழை காரணமாக கட்டடம் பாதிக்கப்பட்டுள்ளதால், செம்மஞ்சேரி காவல் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.துரைப்பாக்கம் காவல் நிலைய எல்லையில் இருந்து, குறிப்பிட்ட பகுதியை பிரித்து, 2009ல் செம்மஞ்சேரி காவல் நிலையம் துவக்கப்பட்டது.

ராஜிவ் காந்தி சாலை, சோழிங்கநல்லுார் நான்குமுனை சந்திப்பில் உள்ள வருவாய்த் துறை கட்டடத்தில், காவல் நிலையம் செயல்பட்டு வந்தது.இந்த இடம் சாலை விரிவாக்கத்திற்கு தேவைப்படுவதால், மாற்று இடம் தேடப்பட்டது. சோழிங்கநல்லுார், ஆவின் வளாகம் அருகில், 24 ஆயிரம் சதுர அடி இடத்தை வருவாய்த்துறை ஒதுக்கியது.

அதில், 78 லட்சம் ரூபாய் செலவில், 3,970 சதுர அடி பரப்பளவில், சட்டம் - - ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து பிரிவு ஆகிய வசதியுடன் இரண்டடுக்கு கட்டடம் கட்டப்பட்டது.காவல் நிலையம் கட்டப்பட்டுள்ள இடம் நீர்பிடிப்பு பகுதி என, தன்னார்வலர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால், அது நீர்ப் பிடிப்பு பகுதி இல்லை என, சம்பந்தப்பட்ட துறை சார்பில் தெரிவிக்கப்படுவதால், விரைவில் அங்கு காவல் நிலையம் செயல்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில், தொடர் கன மழை காரணமாக செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் தண்ணீர் புகுந்தது. மிகவும் பழமையான கட்டடம் என்பதால், நீர் கசிவும் ஏற்பட்டு பாதுகாப்பற்ற தன்மையுடன் காணப்பட்டது.

இதையடுத்து, சோழிங்கநல்லுார் - மேடவாக்கம் சாலை, முகமது சதக் கல்லுாரி எதிரில், எண்:14/17ல் உள்ள குடியிருப்பின் முதல் தளத்தில், தற்காலிகமாக காவல் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.எனவே, பொதுமக்கள் அவசர உதவிக்கு, காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசனின் மொபைல் போன் எண்- 94438 08523, காவல் நிலைய மொபைல் போன் எண்- 94981 00172 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என, காவல்துறை அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X