பொது செய்தி

இந்தியா

ரூ.100 கோடி 4 ஏக்கர் நிலம்

Added : நவ 13, 2021
Share
Advertisement
பெங்களூரு : நுாறு கோடி ரூபாய் மதிப்புள்ள 4 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை, பி.டி.ஏ., மீட்டுள்ளது.நீதிமன்ற உத்தரவுபடி பி.டி.ஏ., எனும் பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்துக்குட்பட்ட நிலங்களை, ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் ஆணைய அதிகாரிகள் ஜே.பி.,நகரில் நுாறு கோடி மதிப்பிலான 4.2 ஏக்கர் நிலத்தை மீட்டுள்ளது.ஆணைய அதிகாரிகள்

பெங்களூரு : நுாறு கோடி ரூபாய் மதிப்புள்ள 4 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை, பி.டி.ஏ., மீட்டுள்ளது.நீதிமன்ற உத்தரவுபடி பி.டி.ஏ., எனும் பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்துக்குட்பட்ட நிலங்களை, ஆக்கிரமிப்பிலிருந்து

மீட்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் ஆணைய அதிகாரிகள் ஜே.பி.,நகரில் நுாறு கோடி மதிப்பிலான 4.2 ஏக்கர் நிலத்தை மீட்டுள்ளது.ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:பெங்களூரின் ஜே.பி.,நகர் கட்டமைப்பை மேம்படுத்த ஆணையத்தின் சார்பில், 1998ல் 4 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆணையத்துக்குட்பட்ட நிலத்தில் பலரும் கட்டடங்களை கட்டி தங்களுக்கு உரிமை கோர முயற்சித்தனர்.

தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில், அந்த நிலத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 40 கட்டடங்கள் இடிக்கப்பட்டு நிலம் மீட்கப்பட்டது.இதே போல், நகரின் பல பகுதிகளில் ஆணையத்துக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதற்கு அதிகாரிகள் குழுவாக பிரிக்கப்பட்டு ஆய்வுப்பணிகள் நடக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X