வெறுப்புணர்வு பேச்சு: சுப்ரீம் கோர்ட் விசாரணை

Added : நவ 13, 2021
Share
Advertisement
புதுடில்லி,:'வெறுப்புணர்வை துாண்டும் பேச்சு மற்றும் வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனு வரும் 22ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.பா.ஜ.,வைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவின் விபரம்:வெறுப்புணர்வை துாண்டும் பேச்சுக்கள்

புதுடில்லி,:'வெறுப்புணர்வை துாண்டும் பேச்சு மற்றும் வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனு வரும் 22ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது

.பா.ஜ.,வைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவின் விபரம்:வெறுப்புணர்வை துாண்டும் பேச்சுக்கள் மற்றும் வதந்திகளால் தனி நபர்கள் மற்றும் சமூகம் வன்முறையால் துாண்டப்படுகின்றனர். இதன் காரணமாக பயங்கரவாத நடவடிக்கைகள், படுகொலைகள் நடக்கின்றன.


பெரிய பாதிப்பு



இது, மக்களின் பாதுகாப்பு மற்றும் தினசரி வாழ்க்கையில் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. வெறுப்புணர்வை துாண்டும் பேச்சு மக்களை பிளவுபடுத்துவதோடு சமூக வளர்ச்சியை தடுக்கிறது.இதை கவனிக்காமல் விட்டால், அது சட்டத்தின் விதிகளை பாதிப்பதோடு, மக்களின் வாழ்வாதாரம், சுதந்திரம் மற்றும் குடிமக்களின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவிக்கும்.

வெறுப்புணர்வு பேச்சு மற்றும் வதந்தி பரப்புவதற்கு எதிரான சர்வதேச சட்டங்களை ஆய்வு செய்து, அதை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


உத்தரவு



இந்த மனு, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், சி.டி.ரவிகுமார் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இந்த மனு வரும் 22ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படும்' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மேலும், உள்துறை, சட்ட அமைச்சகம் மற்றும் சட்ட கமிஷனுக்கு பொது நல மனுவின் பிரதியை அளிக்கும்படியும், மனுதாரர் தரப்பு வழக்கறிஞருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X