'நீட்' மறுதேர்வு உத்தரவு சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி

Added : நவ 13, 2021
Share
Advertisement
புதுடில்லி:எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான, 'நீட்' தேர்வில் இரண்டு மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு, செப்டம்பர் 12ல் நடந்தது. நாடு முழுதும் 16 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர்.மஹாராஷ்டிராவை சேர்ந்த வைஷ்ணவி போபாலி

புதுடில்லி:எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான, 'நீட்' தேர்வில் இரண்டு மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு, செப்டம்பர் 12ல் நடந்தது. நாடு முழுதும் 16 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர்.மஹாராஷ்டிராவை சேர்ந்த வைஷ்ணவி போபாலி மற்றும் அபிஷேக் சிவாஜி என்ற மாணவர்களுக்கான கேள்வி மற்றும், 'ஓ.எம்.ஆர்., ஷீட்' எனப்படும் விடைத்தாள் மாற்றி வழங்கப்பட்டது. தேர்வு எழுதி முடித்த பின்பே இந்த விவகாரம் இவர்களுக்கு தெரியவந்தது.

இது தொடர்பாக மாணவர்கள் தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டது.மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 'பாதிக்கப்பட்ட இரண்டு மாணவர்களுக்கும் மறு தேர்வு நடத்தி முடித்த பின்பே முடிவுகளை வெளியிட வேண்டும்' என, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து என்.டி.ஏ., தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், முடிவுகளை உடனடியாக வெளியிட உத்தரவிட்டது. இதையடுத்து இளநிலை நீட் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின.இந்நிலையில் மாணவர்களுக்கான மறு தேர்வு தொடர்பான மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:பாதிக்கப்பட்ட இரண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களை பார்த்தோம். அவர்கள் முடிந்த வரை கேள்விகளுக்கு விடை அளித்துள்ளனர். அவர்களால் அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்க முடியவில்லை.தேர்வு எழுதும் போது மாணவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களின் நிலை பரிதாபத்துக்கு உரியது.

அதே நேரம் இருவருக்கு மட்டும் மறு தேர்வு நடத்த முடியாது. எனவே மும்பை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X