பொது செய்தி

இந்தியா

மழையால் சேதமடைந்த விளைச்சல் நிவாரணம் வழங்க காங்., வலியுறுத்தல்

Added : நவ 13, 2021
Share
Advertisement
பெங்களூரு : ''மழையால் சேதமைந்த விளைச்சல்களை உடனடியாக ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும்,'' என எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வலியுறுத்தினார்.இது குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு, அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியதாவது:விவசாயத்துறை தகவலின்படி, அக்டோபர் இறுதி வேளையில், 27.72 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதியில் விளைச்சல் சேதமடைந்துள்ளது.ஆனால் அரசு

பெங்களூரு : ''மழையால் சேதமைந்த விளைச்சல்களை உடனடியாக ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும்,'' என எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வலியுறுத்தினார்.

இது குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு, அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியதாவது:விவசாயத்துறை தகவலின்படி, அக்டோபர் இறுதி வேளையில், 27.72 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதியில் விளைச்சல் சேதமடைந்துள்ளது.

ஆனால் அரசு நிவாரணம் வழங்காமல் கை கட்டி அமர்ந்துள்ளது.விளைச்சல் சேதத்தை ஆய்வு செய்வதிலோ, நிவாரணம் வழங்குவதிலோ கவனம் செலுத்தவில்லை.அறுவடைக்கு தயாரான விளைச்சல்கள் தோட்டம், வயல்களில் அழுகுகிறது. இம்முறை 2.64 லட்சம் ஏக்கர் பகுதியில் பயிரிடப்பட்டது.ஜூலை, ஆகஸ்டில் சரியாக மழை பெய்யாததால் விதை சரியாக முளைக்கவில்லை.

அதன்பின் சரியான நேரத்துக்கு உரம் கிடைக்கவில்லை.மலைப்பகுதி, கடலோர பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால், பாக்கு, காபி, மிளகு போன்ற வர்த்தக விளைச்சல்கள் பாழாகின. நோய் தாக்கியுள்ளது.ஆனால் விவசாயத்துறை தகவல்களில், ஒன்றரை மாதமாக மிக அதிகமாக மழை பெய்து, சேதமடைந்த மாவட்டங்களை பற்றிய தகவல்கள் இல்லை. மலைப்பகுதி, கடலோர பகுதிகளில் பாக்கு, மிளகு, காபி நஷ்டமடைந்த தகவலும் இல்லை.

மத்திய அரசும் கூட சரியான நிவாரணம் வழங்கவில்லை. மத்திய, மாநில அரசுகள் இதுபோன்று அலட்சியம் காண்பிப்பது சரியல்ல.மழையால் சேதமடைந்த விளைச்சல்களை உடனடியாக ஆய்வு செய்து, நிவாரணம் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X