பொது செய்தி

இந்தியா

தட்சிண கன்னடாவில் 14 பள்ளிகள் மூடும் அபாயம்

Added : நவ 13, 2021
Share
Advertisement
தட்சிண கன்னடா : பொருளாதார நெருக்கடி, மாணவர் சேர்க்கை சரிவால், தட்சிண கன்னடா மாவட்டத்தில் 14 பள்ளிகள் மூடப்பட உள்ளன.இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் பள்ளிகள் செயல்படாமல் இருந்தன. மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி துவக்கப்பட்டது.கொரோனாவால் பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானதால், மாணவர்களுக்கான கட்டணம் செலுத்த முடியாமல் சிரமப்பட்டனர்.மாணவர்களின் பள்ளி கட்டணம்

தட்சிண கன்னடா : பொருளாதார நெருக்கடி, மாணவர் சேர்க்கை சரிவால், தட்சிண கன்னடா மாவட்டத்தில் 14 பள்ளிகள் மூடப்பட உள்ளன.இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் பள்ளிகள் செயல்படாமல் இருந்தன.

மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி துவக்கப்பட்டது.கொரோனாவால் பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானதால், மாணவர்களுக்கான கட்டணம் செலுத்த முடியாமல் சிரமப்பட்டனர்.மாணவர்களின் பள்ளி கட்டணம் இல்லாதால் பல தனியார் பள்ளிகளும் பொருளாதார சிக்கலில் தள்ளப்பட்டன.

இதனால் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலையும் ஏற்பட்டது.பொருளாதார நெருக்கடியால் தட்சிண கன்னடா மாவட்டத்தில் ஒரு அரசு பள்ளி, நான்கு அரசு உதவிபெறும் பள்ளிகள், 9 தனியார் பள்ளிகள் என 14 பள்ளிகள் மூடும் நிலையை எதிர்நோக்கியுள்ளன.இந்த பள்ளி நிர்வாகத்தினர், பள்ளிகளை மூடுவதற்கு கோரிக்கை வைத்து

கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.மாணவர் சேர்க்கை சரிவும் பள்ளிகளை மூடுவதற்கான முக்கிய காரணமாக உள்ளது.மூடப்படும் தனியார் பள்ளி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:பெரும்பான்மையான குழந்தைகளின் பெற்றோர் சிறு தொழில் செய்வோராக உள்ளனர்.

இதனால் அவர்களிடம் கட்டணம் செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது.மாணவர்கள் பலரும் அரசு பள்ளிகளில் சேர்ந்து விட்டனர். மிக குறைவான மாணவர்களை வைத்து பள்ளியை நடத்த முடியாது. கல்வி துறை தான் தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X