பெண்ணை கடித்து கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பெண்ணை கடித்து கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது

Added : நவ 13, 2021
Share
ராம்நகர் : இரண்டு வாரங்களுக்கு முன், பெண்ணை கடித்து கொன்று, கிராwwமத்தினரை அச்சுறுத்திய சிறுத்தை கூண்டில் சிக்கியதால் மக்கள் நிம்மதியடைந்தனர்.ராம்நகர் மாகடி, கல்லுபாளையா கிராமத்தை சேர்ந்த பெண் விவசாயி மஹாலட்சுமி, 38, தோட்டத்துக்கு செல்லும் போது, சிறுத்தைக்கு பலியானார். இதை பிடிக்கும்படி கிராமத்தினர் வலியுறுத்தினர்.சிறுத்தையை பிடிக்க, வனத்துறையினரும் நடவடிக்கை
 பெண்ணை கடித்து கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது

ராம்நகர் : இரண்டு வாரங்களுக்கு முன், பெண்ணை கடித்து கொன்று, கிராwwமத்தினரை அச்சுறுத்திய சிறுத்தை கூண்டில் சிக்கியதால் மக்கள் நிம்மதியடைந்தனர்.

ராம்நகர் மாகடி, கல்லுபாளையா கிராமத்தை சேர்ந்த பெண் விவசாயி மஹாலட்சுமி, 38, தோட்டத்துக்கு செல்லும் போது, சிறுத்தைக்கு பலியானார். இதை பிடிக்கும்படி கிராமத்தினர் வலியுறுத்தினர்.சிறுத்தையை பிடிக்க, வனத்துறையினரும் நடவடிக்கை எடுத்தனர்.

32 கேமராக்கள், 6க்கும் மேற்பட்ட கூண்டுகள் வைக்கப்பட்டது. அதில் நேற்று காலை, 8 வயது பெண் சிறுத்தை சிக்கியது.மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். சிறுத்தையை பார்க்க மக்கள் கூட்டம், கூட்டமாக வந்தனர். சிலர் மொபைலில் போட்டோ எடுத்தனர்.கிராமத்தில் மேலும் சில சிறுத்தைகள் இருப்பதால், வனத்துறையினர் நடவடிக்கையை தொடர்ந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X