பொது செய்தி

தமிழ்நாடு

கலைமகள் சபா நிறுவனத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரி நியமிக்க உத்தரவு

Added : நவ 13, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:மோசடி புகாரில் சிக்கிய 'கலைமகள் சபா' நிறுவனத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமிக்கும்படி வணிக வரித்துறை செயலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கலைமகள் சபா நிறுவனம் 5.33 லட்சம் உறுப்பினர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் 'டிபாசிட்' பெற்று'ரியல் எஸ்டேட்' வர்த்தகத்தில் இறங்கியது.தொடர் முறை கேடால் கலைமகள் சபா நிறுவனத்துக்கு எதிராக உயர்

சென்னை:மோசடி புகாரில் சிக்கிய 'கலைமகள் சபா' நிறுவனத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமிக்கும்படி வணிக வரித்துறை செயலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலைமகள் சபா நிறுவனம் 5.33 லட்சம் உறுப்பினர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் 'டிபாசிட்' பெற்று'ரியல் எஸ்டேட்' வர்த்தகத்தில் இறங்கியது.தொடர் முறை கேடால் கலைமகள் சபா நிறுவனத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

சொத்துக்களை விற்று உறுப்பினர்களுக்கு பிரித்துக் கொடுக்க ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி வழக்கறிஞர்,சிறப்பு அதிகாரியை 'ரிசீவர்'களாக நியமித்து 1999ல் உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. தற்போது ஒருவர் மட்டுமே ரிசீவராக உள்ளார்.

இந்நிலையில் கலைமகள் சபா உறுப்பினர்கள் பாதுகாப்பு சங்க தலைவர் கோவை சக்தி தாக்கல் செய்த மனுவில் 'உறுப்பினர்களின் முதலீடு அடிப்படையில் கலைமகள் சபா பெயரில் உள்ள நிலங்களை ஒதுக்க வேண்டும்' என்று கோரியிருந்தார்.மனுக்களை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:

நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு 22 ஆண்டுகள் ஆகியும் உரிய பணம் கிடைக்க வில்லை.மூன்று வாரங்களுக்குள் கலைமகள் சபா நிர்வாகத்தை கையில் எடுக்க பதிவுத்துறை உதவி ஐ.ஜி. அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை சிறப்பு அதிகாரியாக வணிக வரித்துறை செயலர் நியமிக்க வேண்டும்., என இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalyanaraman - Chennai,இந்தியா
13-நவ-202110:47:16 IST Report Abuse
Kalyanaraman சபாஷ் 22 வருடங்களாகியும் வழக்கை நீதிமன்றத்தால் தீர்க்க முடியவில்லை. கடந்த காலங்களில் எத்தனை எத்தனை பணமோசடிகள் எதற்குமே தீர்ப்பும் இல்லை தீர்வும் இல்லை. முதன்முதலில் தர்மத்தையும், பலவிதமான சட்டங்களையும் உலகத்திற்கு அளித்த நாட்டில் நாம் பிறந்தோம், வாழ்கிறோம் என்ற பெருமையுடன் வாழவேண்டியதுதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X