செக் போஸ்ட்..1| Dinamalar

பொது செய்தி

இந்தியா

செக் போஸ்ட்..1

Added : நவ 13, 2021
Share
மழை நேரத்தில்...மழை நேரத்தில் தான் அதன் பாதிப்பு பற்றி அதிகாரத்தில் இருக்குறவங்க பேசுறாங்க; 'விசிட்' செய்து பந்தா காட்றாங்க.கால்வாய்களில் ஓட வேண்டிய மழைநீரெல்லாம் சாலைகளிலும் தாழ்வான பகுதிகளில் வீடுகளில் அழையா விருந்தாளியாக நுழைந்து பலரது துாக்கம், நிம்மதியை கெடுத்து வருகிறது.பல இடங்களில் கால்வாய்களை காணவில்லை. மழை நீர் கால்வாயை குறுக்கி சுருக்கி, பிளாட்

மழை நேரத்தில்...மழை நேரத்தில் தான் அதன் பாதிப்பு பற்றி அதிகாரத்தில் இருக்குறவங்க பேசுறாங்க; 'விசிட்' செய்து பந்தா காட்றாங்க.கால்வாய்களில் ஓட வேண்டிய மழைநீரெல்லாம் சாலைகளிலும் தாழ்வான பகுதிகளில் வீடுகளில் அழையா விருந்தாளியாக நுழைந்து

பலரது துாக்கம், நிம்மதியை கெடுத்து வருகிறது.பல இடங்களில் கால்வாய்களை காணவில்லை. மழை நீர் கால்வாயை குறுக்கி சுருக்கி, பிளாட் போட்டு வித்துட்டாங்க.தொடர் மழையால் சாலையெல்லாம் குண்டும் குழியுமாகி, வாகனங்கள் செல்ல முடியல. ஜனங்களோட வருத்தம் தீரல.மாட்டுப்பட்டியான நிழற்குடை!சாம்பியன் கல்லறை சதுக்கத்தில் பஸ் நிழற்கூடம் அமைச்சிருக்காங்க.

முதியோர் சிலர் ஓய்வெடுக்க வசதியாகவும் இருந்தது. ஆனால், மாட்டு பட்டியாக மாறி சாணி மயமாகி உள்ளது. சுற்றுப்புற பகுதியும் சீர்கெட்டுள்ளது. மழைக்கு பொதுமக்கள் ஒதுங்க கூட முடியாதபடி காணப்படுகிறது.அமரர் ஊர்தி வாங்குவாங்களா? கோல்டன் சிட்டி முனிசியை தரம் உயர்த்திட்டாங்கன்னு பெருசா கூறுகிறாங்க.இறந்தவர் உடல்களை எடுத்துச் செல்ல அமரர் ஊர்தி வசதி செய்யல. தனியார் வாகனங்களை தான் எதிர்ப்பார்க்க வேண்டியுள்ளது.

முனிசி., சார்பில் 'அமரர் ஊர்தி' வாங்க 25 ஆண்டுகளாக தீர்மானம் நிறைவேற்றுறாங்களே தவிர, அந்த தீர்மானங்கள், தானா கிழிந்து போனது தான் மிச்சம். இறந்தவர் உடல்களை அடக்கம் செய்யவும், இறப்பு சான்றிதழ் பெறவும் விமோச்சனமே கிடைக்கல.உழைச்சவங்களுக்கு வாய்ப்பில்லை!மேலவை தேர்தலில் கோலார் தொகுதியில் கை கட்சியில் காலாகாலமாக உழைத்தவங்களுக்கு 'சீட்' கிடைக்க வாய்ப்பு ரொம்ப கம்மியாம்.

இதுவரைக்கும் உறுப்பினரே இல்லாத புல்லுக்கட்டு கட்சிக்காரருக்கு 'சீட்' தருவதாக உறுதி ஆகிடுச்சாம். பல கோடி உருட்டல், பெறட்டல் வேலையில் திறமையானவர். பலரது அசம்பிளி வெற்றிக்கு வங்கி பணத்தை தாராளமா புரள செய்தாராம். அதனால் அவரையே எம்.எல்.சி., ஆக்கப்போறாங்களாம். தேர்தலுக்கு தயார் செய்றாங்களாம்!மழை நேரத்தில்...

மழை நேரத்தில் தான் அதன் பாதிப்பு பற்றி அதிகாரத்தில் இருக்குறவங்க பேசுறாங்க; 'விசிட்' செய்து பந்தா காட்றாங்க.

கால்வாய்களில் ஓட வேண்டிய மழைநீரெல்லாம் சாலைகளிலும் தாழ்வான பகுதிகளில் வீடுகளில் அழையா விருந்தாளியாக நுழைந்து பலரது துாக்கம், நிம்மதியை கெடுத்து வருகிறது.

பல இடங்களில் கால்வாய்களை காணவில்லை. மழை நீர் கால்வாயை குறுக்கி சுருக்கி, பிளாட் போட்டு வித்துட்டாங்க.

தொடர் மழையால் சாலையெல்லாம் குண்டும் குழியுமாகி, வாகனங்கள் செல்ல முடியல. ஜனங்களோட வருத்தம் தீரல.

மாட்டுப்பட்டியான நிழற்குடை!

சாம்பியன் கல்லறை சதுக்கத்தில் பஸ் நிழற்கூடம் அமைச்சிருக்காங்க. முதியோர் சிலர் ஓய்வெடுக்க வசதியாகவும் இருந்தது.

ஆனால், மாட்டு பட்டியாக மாறி சாணி மயமாகி உள்ளது. சுற்றுப்புற பகுதியும் சீர்கெட்டுள்ளது. மழைக்கு பொதுமக்கள் ஒதுங்க கூட முடியாதபடி காணப்படுகிறது.

அமரர் ஊர்தி வாங்குவாங்களா?

கோல்டன் சிட்டி முனிசியை தரம் உயர்த்திட்டாங்கன்னு பெருசா கூறுகிறாங்க.

இறந்தவர் உடல்களை எடுத்துச் செல்ல அமரர் ஊர்தி வசதி செய்யல. தனியார் வாகனங்களை தான் எதிர்ப்பார்க்க வேண்டியுள்ளது.

முனிசி., சார்பில் 'அமரர் ஊர்தி' வாங்க 25 ஆண்டுகளாக தீர்மானம் நிறைவேற்றுறாங்களே தவிர, அந்த தீர்மானங்கள், தானா கிழிந்து போனது தான் மிச்சம்.

இறந்தவர் உடல்களை அடக்கம் செய்யவும், இறப்பு சான்றிதழ் பெறவும் விமோச்சனமே கிடைக்கல.

உழைச்சவங்களுக்கு வாய்ப்பில்லை!

மேலவை தேர்தலில் கோலார் தொகுதியில் கை கட்சியில் காலாகாலமாக உழைத்தவங்களுக்கு 'சீட்' கிடைக்க வாய்ப்பு ரொம்ப கம்மியாம்.

இதுவரைக்கும் உறுப்பினரே இல்லாத புல்லுக்கட்டு கட்சிக்காரருக்கு 'சீட்' தருவதாக உறுதி ஆகிடுச்சாம். பல கோடி உருட்டல், பெறட்டல் வேலையில் திறமையானவர்.

பலரது அசம்பிளி வெற்றிக்கு வங்கி பணத்தை தாராளமா புரள செய்தாராம். அதனால் அவரையே எம்.எல்.சி., ஆக்கப்போறாங்களாம். தேர்தலுக்கு தயார் செய்றாங்களாம்!

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X