டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஆய்வு: நிவாரண உதவிகளை வழங்கினார்

Updated : நவ 13, 2021 | Added : நவ 13, 2021 | கருத்துகள் (11) | |
Advertisement
சென்னை :டெல்டா மாவட்டங்களில் மழை பாதிப்புகளை, முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு, விவசாயிகளை சந்தித்து சேத விபரங்கள் கேட்டறிந்தார்.முதல்வர் ஸ்டாலின், சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று, ஐந்து நாட்களாக ஆய்வு செய்தார்; குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை விரைந்து வெளியேற்ற உத்தரவிட்டார். ஆறாவது நாளான நேற்று, சென்னை தேனாம்பேட்டையில் தொற்று
 டெல்டா மாவட்டங்கள், முதல்வர், ஆய்வு

சென்னை :டெல்டா மாவட்டங்களில் மழை பாதிப்புகளை, முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு, விவசாயிகளை சந்தித்து சேத விபரங்கள் கேட்டறிந்தார்.

முதல்வர் ஸ்டாலின், சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று, ஐந்து நாட்களாக ஆய்வு செய்தார்; குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை விரைந்து வெளியேற்ற உத்தரவிட்டார். ஆறாவது நாளான நேற்று, சென்னை தேனாம்பேட்டையில் தொற்று நோய் பரவாமல் தடுக்க, மருத்துவ முகாம்களை துவக்கி வைத்தார்.

பின், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டார். வண்டலுார் தாலுகாவில் வசிக்கும் இருளர், பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த, 33 குடும்பங்களுக்கு, கீழக்கோட்டையூர் கிராமத்தில் இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.முகாமில் தங்கியுள்ளோருக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார்.ஆய்வுக்கு சென்ற வழியில், கீழக்கோட்டையூரில் உள்ள டீ கடையில் டீ குடித்து, பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனுார், அடையாறு ஆறு துவங்கும் இடம், மண்ணிவாக்கம் பகுதி, அடையாற்று பாலத்தில், கன மழையால் ஏற்பட்டு உள்ள நீர் வரத்தை ஆய்வு செய்தார்.முடிச்சூர், சி.எஸ்.ஐ., செயின்ட் பால்ஸ் பள்ளியில் உள்ள நிவாரண முகாம் மற்றும் மருத்துவ முகாமை ஆய்வு செய்தார்.

அங்கிருந்து வெளியே வந்த போது, முதல்வரிடம் அப்பகுதி மக்கள், 'எங்கள் ஊரை காப்பாற்றுங்கள்' என கேட்டனர். அவர்களுக்கு, ஸ்டாலின் ஆறுதல் கூறிவிட்டு சென்றார்.

தாம்பரம் பஸ் நிலையத்தில் மழை பாதிப்புகளை பார்வையிட்டதுடன், துாய்மை பணியாளர்களிடம், தேவைப்படும் உதவிகளை கேட்டறிந்தார். முதல்வருடன் அமைச்சர்கள் அன்பரசன், சுப்பிரமணியன், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அதிகாரிகள் சென்றனர். ஆய்வுப்பணி முடித்து வந்த முதல்வர், நேற்று மாலை காரில் புதுச்சேரி புறப்பட்டு சென்றார்.


latest tamil newsஇன்று காலை 7:30 மணிக்கு, கடலுார் மாவட்டம் அரங்கமங்கலம், அடூர் அகரம்; காலை 9:30க்கு மயிலாடுதுறை மாவட்டம், இருக்கூர், தரங்கம்பாடி பகுதிகளுக்கு சென்றார். நீரில் மூழ்கிய பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதிப்புகள் குறித்து, விவசாயிகளிடமும் கேட்டறிந்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.மயிலாடுதுறையில் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி தாலுகா புத்தூர் கேசவன் பாளையம் பகுதியில் மழைநீர் தேங்கி பாதிக்கபட்ட சம்பா பயிர்கள் மற்றும் குடியிருப்புகளை முதல்வர் ஸ்டலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விவசாயிகள் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புதூர் கிராமத்தில் கனமழையால் மழை நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டிருந்த சம்பா சாகுபடி பயிர்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவ மழையால் மாவட்டம் முழுவதும் 13 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்தும், மாவட்டத்தில் 41 கால்நடைகள் உயிரிழந்தது குறித்தும், அதே போல் 90 க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கபட்டுள்ளது குறித்த புகைபடங்கள் காட்சிபடுத்தபட்டிருந்தது.

மேலும் பல்வேறு பகுதிகளில் பாதிக்கபட்டிருந்த பயிர்களின் மாதிரிகளும் காட்சிபடுத்தபட்டிருந்தது. அனைத்து பாதிப்புகளையும் பார்வையிட்ட முதல்வர் அங்கு காத்திருந்த பொதுமமக்கள் மற்றும் விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
பயிர்கள் பாதிப்பு குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்த முதல்வர் முழுமையாக ஆய்வு செய்து நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து தரங்கம்பாடி அருகே கேசவன் பாளையம் பகுதியில் மழை நீரால் சூழ்ந்து பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இடம் பாதிப்புகள் குறித்தும் கோரிக்கை குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வை, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்குகிறார். தொடர்ந்து தரங்கம்பாடி தாலுகா கேசவன்பாளையம் கிராமத்திற்கு வந்த ஸ்டாலின் அங்கு உள்ள 135 குடும்பத்தினருக்கு தலா 5 கிலோ அரிசி 15 வகையான மளிகைப் பொருட்கள் புடவை போர்வை மற்றும் காய்களை வழங்கினார்.

முதல்வரின் ஆய்வின் போது அமைச்சர்கள் கே.என்.நேரு, மெய்யநாதன், பெரியகருப்பன், பெரியசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், வேளாண்மை துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.latest tamil news


நாகப்பட்டினம் மாவட்டம், கருங்கனி, அருந்தவபுலம்; திருவாரூர் மாவட்டம், ராயநல்லுார், புழுதிக்குடி; மாலை 3:30 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டம், பெரியக்கோட்டை பகுதிகளை பார்வையிடுகிறார்; இரவு சென்னை திரும்புகிறார்.


latest tamil newsAdvertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Navai Mukundhan - Chennai,இந்தியா
13-நவ-202113:10:46 IST Report Abuse
Navai Mukundhan தலைவர், தனது வயதையும் பொருட்படுத்தாமல் ஒரு இளையனைப் போல் துரிதமாக பல இடங்களுக்கும் சென்று செயல்படுவது மிகவும் சிறப்பாக உள்ளது. தலைவரின் சேவை சிறப்பாக தொடரட்டும்.........வாழ்க தமிழகம், வாழ்க இந்தியா.
Rate this:
Cancel
13-நவ-202111:37:13 IST Report Abuse
theruvasagan ஆமா. வெள்ளம் பாதித்த காடு கழனியெல்லாம் பார்வையிட கான்கிரிட் பாதை போட்டாச்சாமா?
Rate this:
Cancel
13-நவ-202109:26:13 IST Report Abuse
ராஜா அங்கேயும் நல்ல டீக்கடையா பார்த்து டீக்குடிப்பாரு போல.
Rate this:
வந்தியதேவ வல்லவரையன் - பல்லவ நாடு,இந்தியா
13-நவ-202113:10:28 IST Report Abuse
வந்தியதேவ வல்லவரையன்அதிமேதாவி ராஜா.... நீ எந்த ஏரியா...ன்னு தெரியல... மவனே... நீயெல்லாம் 2015 சென்னை பெருவெள்ளத்துல... வேளச்சேரி ஏரியாவுல மாட்டியிருந்தா... தெரிஞ்சிருக்கும்... செம்பரம்பாக்கம் ஏரியிலந்து ஐம்பதாயிரம் கனஅடி தண்ணீரை ஒரே நேரத்தில் திறந்துவிட்ட புண்ணியவதி... உன்னோட “அம்மா” ஹெலிகாப்டர்ல கறுப்பு பூனைப் படையோட... சுத்தி பார்த்து ஆறுதல் சொன்னதும் - மழை வெள்ளம் வடிஞ்ச பின்பு தன்னோட ஆர்.கே.நகர் தொகுதியில் பிரச்சார வேனில் சுத்தி.. பிரச்சாரம் செய்த உன்னோட “அம்மா” போல... இவர் இருந்திருக்கணும்... மழை துவங்கும் நாள் முன்பிருந்தே... மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு காலை முதல் மாலை வரை சுற்றி சுற்றி வருகிறாரே... அது தப்புய்யா...?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X