பெங்களூரு:கர்நாடக அரசு பஸ்களில் பயணிகளுக்கு இடையூறாக அலைபேசியில் பாட்டு கேட்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பஸ்களின் பயணிப்போர் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அலைபேசியில் பாடல்களை சத்தமாக கேட்பது, திரைப்படங்களை பார்ப்பதால் வாக்குவாதம், மோதல் ஏற்படுகிறது. இரவில் துாக்கம் கெடும் வகையில் இப்பிரச்னை அதிகமாக உள்ளது. இது தொடர்பாக உயர்நீதி மன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடக அரசு பஸ்களில் அலைபேசியில் பாடல்களை கேட்கவும், திரைப்படங்களை பார்க்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் சிவயோகி கலசத் வெளியிட்டுள்ள உத்தரவு: ஒலி மாசை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பஸ்களில் பயணிகள் அலைபேசிகளில் சத்தமாக பாடல்களை கேட்க, திரைப்படங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதை மீறுவோரை பஸ்சில் இருந்து இறக்கிவிட டிரைவர், கண்டக்டருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தையும் திருப்பி அளிக்க தேவையில்லை. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE