பொது செய்தி

தமிழ்நாடு

பல்கலை 'ரூசா' திட்டத்தில் 88 ஆய்வு உதவியாளர் பணியிடங்கள்: விடுபட்ட புலங்கள் சேர்க்கப்படுமா

Added : நவ 13, 2021
Share
Advertisement
மதுரை:மதுரை காமராஜ் பல்கலையில் துறைகள், புலங்கள் வாரியாக 'ரூசா' ஆய்வுத் திட்டங்களுக்காக 88 ஆய்வு உதவியாளர்கள் (ஜே.ஆர்.எப்., மற்றும் பி.எப்.,) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.இப்பல்கலையில் 'ரூசா' இரண்டாம் கட்ட திட்டத்தில் பணியாற்ற பயாலஜிகல் சயின்ஸ், பயோ டெக்., பொருளியல் உட்பட 17 புலங்களுக்கான ஆய்வு உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மதுரை:மதுரை காமராஜ் பல்கலையில் துறைகள், புலங்கள் வாரியாக 'ரூசா' ஆய்வுத் திட்டங்களுக்காக 88 ஆய்வு உதவியாளர்கள் (ஜே.ஆர்.எப்., மற்றும் பி.எப்.,) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இப்பல்கலையில் 'ரூசா' இரண்டாம் கட்ட திட்டத்தில் பணியாற்ற பயாலஜிகல் சயின்ஸ், பயோ டெக்., பொருளியல் உட்பட 17 புலங்களுக்கான ஆய்வு உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதுகலை பட்டம் முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலுக்கு பின் தேர்வு செய்யப்படுவர். ஜே.ஆர்.எப்., (ஜூனியர் ரிசர்ச் பெல்லோ) பிரிவுக்கு ரூ.36 ஆயிரம், பி.எப்., (புராஜெக்ட் பெல்லோ) பிரிவுக்கு மாதம் ரூ. 16 ஆயிரம் ஆய்வு உதவித் தொகை இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். நவ.,24க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என பதிவாளர் வசந்தா தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பில் தமிழ், ஆங்கிலம், புவியியல், இளைஞர் நலத்துறை, மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், பிற மொழிகள் துறை உள்ளிட்டவை இடம் பெறவில்லை. 'ரூசா' முதற்கட்டம் போல் விடுபட்ட முக்கிய புலங்களிலும் ஆய்வு உதவியாளர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X