ராஜேந்திர பாலாஜி மீதுரூ.3 கோடி மோசடி புகார்

Updated : நவ 13, 2021 | Added : நவ 13, 2021 | கருத்துகள் (16) | |
Advertisement
விருதுநகர் :ஆவினில் வேலை வாங்கித் தருவதாக, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நண்பரும், வெம்பக்கோட்டை ஒன்றிய அ.தி.மு.க., செயலருமான விஜயநல்லதம்பி, 30 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், 'நான் பலரிடம் வாங்கி கொடுத்த 3 கோடி ரூபாயை ராஜேந்திர பாலாஜி திரும்பி தரவில்லை' என, விஜயநல்லதம்பி, விருதுநகர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
ராஜேந்திர பாலாஜி  ,ரூ.3 கோடி மோசடி புகார்

விருதுநகர் :ஆவினில் வேலை வாங்கித் தருவதாக, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நண்பரும், வெம்பக்கோட்டை ஒன்றிய அ.தி.மு.க., செயலருமான விஜயநல்லதம்பி, 30 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், 'நான் பலரிடம் வாங்கி கொடுத்த 3 கோடி ரூபாயை ராஜேந்திர பாலாஜி திரும்பி தரவில்லை' என, விஜயநல்லதம்பி, விருதுநகர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சாத்துார் வெம்பக்கோட்டை ரோட்டைச் சேர்ந்தவர் ரவீந்திரன், 49. இவர், சகோதரியின் மகனுக்கு விருதுநகர் ஆவினில் மேலாளர் வேலை வாங்கி தர, வெம்பக்கோட்டை அ.தி.மு.க., ஒன்றிய செயலர் விஜயநல்லதம்பியிடம் 30 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.
வேலை வாங்கித் தரவில்லை. ஆட்சி மாறியதும், பணத்தை திரும்ப தருவதாகக் கூறிய விஜயநல்லதம்பி இழுத்தடித்தார்.


latest tamil newsஅவர் மீது எஸ்.பி., மனோகரிடம் 2021 ஆகஸ்ட் 28ல் ரவீந்திரன் புகார் அளித்தார். போலீசார், ரவீந்திரன், விஜயநல்லதம்பியை 2021 செப்டம்பர் 25ல் விசாரணைக்கு அழைத்தனர். இன்ஸ்பெக்டர் கணேஷ் தாஸ் விசாரித்தார்.
அப்போது, விஜயநல்லதம்பி, தான் வாங்கிய பணத்தை 2021 அக்டோபர் 1ல் தருவதாக கூறியுள்ளார்; ஆனால் தரவில்லை. அக்டோபர் 1ல் இன்ஸ்பெக்டரிடம் ரவீந்திரன் கேட்டபோது, 'பலரிடம் வாங்கிக் கொடுத்த, 3 கோடி ரூபாயை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருப்பி தரவில்லை' என, விஜய நல்லதம்பி புகார் கொடுத்துள்ளார்' என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பணத்தை பெற்றுத் தருமாறு மதுரை ஐ.ஜி., அன்புவிடம் ரவீந்திரன் புகார் அளித்துள்ளார்.

விஜயநல்லதம்பி கூறுகையில், ''உடல்நலக் குறைவால், குறிப்பிட்ட நாளில் ரவீந்திரனுக்கு பணத்தை திருப்பி அளிக்க முடிய வில்லை. விரைவில் அவர் பணத்தை தந்து விடுவேன். நான் பலரிடம் வாங்கி ராஜேந்திர பாலாஜியிடம் கொடுத்த 3 கோடி ரூபாயை மீட்டு தருமாறு, போலீசில் புகார் அளித்துள்ளேன்,'' என்றார்.

இது தொடர்பாக, ராஜேந்திர பாலாஜியை அலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்ற போது, அவர் அழைப்பை துண்டித்தார்.விருதுநகர் எஸ்.பி., மனோகர் கூறுகையில், ''ரவீந்திரன் அளித்த புகார் குறித்து விசாரிக்க, சாத்துார் டி.எஸ்.பி.,யிடம் கூறப்பட்டுள்ளது. அவரது விசாரணையில், பணத்தை திரும்ப அளிப்பதாக விஜயநல்லதம்பி கூறியுள்ளார்,'' என்றார்.ரவீந்திரன் புகார் மீதும், ராஜேந்திர பாலாஜி மீதான விஜயநல்லதம்பியின் புகார் மீதும் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை.இன்ஸ்பெக்டர் கணேஷ்தாஸ் கூறுகையில், ''இருவர் கொடுத்த புகார் மீதும் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை. ஆதாரங்களை திரட்டி கொண்டிருக்கிறோம்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (16)

M.RAGHU RAMAN - chennai,இந்தியா
13-நவ-202121:28:42 IST Report Abuse
M.RAGHU RAMAN சட்டையை பிடித்து கேள்
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
13-நவ-202119:50:10 IST Report Abuse
RajanRajan ஒருத்தன் அமைச்சரின் அல்லக்கை என்று காட்டி கொண்டு வேலை வாங்கி தருகிறேன் என கட்டிங் கலெக்சன் பண்ணிட்டான். அவனுக்கு லஞ்சம் கொடுத்தாவது வேலை வாங்க தயாரான ஒரு கூட்டம். எனவே முதல் மோசடி வழக்கு அல்லக்கை மீது பதிவாகும். வேலை வாங்கி கொடுக்காத பட்சத்தில் ஏமாந்தவர்கள் அல்லக்கை மீது கொடி புடிச்சுட்டேன். அல்லக்கை என்ன பண்ணுவான் அவன் மந்திரியை கைய காட்டிட்டன். இப்போ மாதிரி என்ன சொல்வான் நல்லதம்பி என்பது யாருன்னே எனக்கு தெரியாது என்பான். இடையிலே போலீஸ் நல்ல கட்டிங் போட்டுடுவாங்க. எப்பாடான்னு காவல் இருக்கும் ஆளும்கட்சி வல்லூறுகள் போலீசை விரட்ட அவன் மறுபடியும் இவனுகளை கூப்பிட்ட கஞ்சி காய்ச்சுவான். ஏமாந்தவன் ஒரு பக்கம் அலைவான். அவன் துட்டுலே அல்லக்கையும் மந்திரியும் குளிகாய்வாங்க. அடுத்தப்புலே வக்கீல் சாமி ஜுட்ஜ் சாமின்னு மாறி மாறி கேஸை வறுத்துகிட்டே இருப்பானுங்க. தீஞ்சு போவுற வரைக்கும். கேட்டா ஜனநாயகம் சட்டம் கட்டம்னு போட்டு ஒட்டிருவானுங்க. மொத்தத்தில் மக்கள் எப்படி எல்லாம் ஏமாற்ற படுகிறார்கள். என்பது.தொடர் கதை தான். லஞ்சம் கொடுத்தவனுக்கு வேலைக்கு வந்ததும் எப்படி எல்லாம் லஞ்சம் வாங்கலாம்னு ஒரு க்ளாஸ் எடுத்து லஞ்சம் வாங்கிருவான் அல்லக்கை. நல்ல தெருக்கூத்து நடத்துறானுங்க.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
13-நவ-202118:22:51 IST Report Abuse
DVRR ஆவினில் மேலாளர் வேலை?? ரூ 30 லட்சம் கையூட்டு?? மேலாளர் வேலைக்கு சம்பளம் எவ்வளவு குழந்தாய் ஒரு கோடி இருக்குமா???வெறும் ரூ 5 லட்சம் வருடத்திற்கு அதுக்கு இந்த லஞ்சம்??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X