கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கொலிஜியம் மீது நம்பிக்கை வையுங்கள்: வக்கீல்களுக்கு கிருஷ்ணசாமி கோரிக்கை

Added : நவ 13, 2021
Share
Advertisement
கோவை:'சென்னை ஐகோர்ட் நீதிபதி சஞ்சிப் பானர்ஜியை இடமாற்றம் செய்வதற்கான, கொலிஜியத்தின் பரிந்துரையை தமிழக வக்கீல்கள் அரசியலாக்கக் கூடாது' என, புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், மாற்றம் ஆகியவற்றில் மத்திய அரசுக்கு இருந்த முழு அதிகாரத்தையும் கொலிஜியம் தனது கையில்

கோவை:'சென்னை ஐகோர்ட் நீதிபதி சஞ்சிப் பானர்ஜியை இடமாற்றம் செய்வதற்கான, கொலிஜியத்தின் பரிந்துரையை தமிழக வக்கீல்கள் அரசியலாக்கக் கூடாது' என, புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், மாற்றம் ஆகியவற்றில் மத்திய அரசுக்கு இருந்த முழு அதிகாரத்தையும் கொலிஜியம் தனது கையில் எடுத்திருக்கிறது. அதன் பரிந்துரையில், சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, மேகாலயாவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதை ரத்து செய்யக்கோரி, சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் கொலிஜியத்துக்கு கடிதம் எழுதியிருக்கின்றனர்.

இது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவே கருத வேண்டியுள்ளது. தலைமை நீதிபதி நியமனத்தை, தமிழக அரசியல் அதிகார வளையத்திற்குள் கொண்டு வந்து விட்டால், தமிழக மக்களுடைய நிலைமை விபரீதமாகி விடும். அரசியல் ரீதியாகக் குரல் கொடுக்கும் போக்கை சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் விட்டுவிட்டு, கொலிஜியம் மீது நம்பிக்கை வைத்துச் செயல்பட வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X