வாஷிங்டன்:ஆப்கனில் நிலையற்ற அரசியல் சூழலின் பின்னணியில் நீண்ட காலமாக பாக்., இருந்து வந்துள்ளதாக, அமெரிக்க பார்லி., குழுவின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பார்லி., ஆராய்ச்சிக் குழு ஆப்கன் நிலவர அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:பாகிஸ்தான் அரசு, தலிபானுக்கு அளித்து வரும் ஆதரவு உள்ளிட்ட பல நடவடிக்கைகள் வாயிலாக ஆப்கன் அரசியலில்ஸ்திரமற்ற சூழலைஉருவாக்கும் முயற்சியில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது.
தற்போது ஆப்கனில் தலிபான் ஆட்சி அமைந்திருப்பது, அங்கு இந்தியாவின் ஆதிக்கத்தை குறைக்க பல ஆண்டுகளாக பாக்., மேற்கொண்ட முயற்சிக்கு கிடைத்த வெற்றி எனலாம். ஆப்கன் விவகாரத்தில் அமெரிக்கா மேலும் கடுமையாக நடந்து கொண்டால் அது, தலிபான் ஆட்சியிலும் பிராந்திய அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதுமட்டுமின்றி, ஏற்கனவே மோசமான நிலையில் உள்ள ஆப்கன் மக்கள் மேலும் பாதிப்பிற்கு ஆளாவர்.பாக்., ரஷ்யா, சீனா மற்றும் கத்தார் போன்ற அமெரிக்காவின் நட்பு நாடுகள், ஆப்கனில் தலிபான்ஆட்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்தால், அமெரிக்கா தனிமைப் படுத்தப்படும்; இது, அமெரிக்காவின் அழுத்தத்திற்கு எதிரான தலிபான் நடவடிக்கைகளுக்கு வலு சேர்க்கும்.
பாக்., அதிகாரிகள் தலிபானுக்கு ஆதரவாக பகிரங்க அறிக்கைகள் விடுகின்றனர்.ஆனால் ஒருகட்டத்தில் தலிபான்களின் சவால்கள், இடையூறுகள் ஆகியவற்றை சந்திக்க வேண்டிய நிலைக்கு பாக்., ஆளாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE